ரொம்ப நாளா அதை செய்யணும்னு நினைச்சோம்.. நாக் அவுட் முன்னாடி செஞ்சுட்டோம்.. ரோகித் சர்மா பேட்டி

Rohit Sharma Press 2
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற கடைசி லீப் போட்டியில் நெதர்லாந்தை 160 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றடித்த இந்தியா 9 போட்டிகளில் 9 வெற்றிகளை பதிவு செய்தது. பெங்களூருவில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 411 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

இந்தியாவுக்கு அதிகபட்சமாக ரோஹித் சர்மா 61, கில் 51, விராட் கோலி 51, ஸ்ரேயாஸ் ஐயர் 128*, ராகுல் 102 என டாப் 5 பேட்ஸ்மேன்களும் 50க்கும் மேற்பட்ட ரன்களை அடித்து உலக சாதனை படைக்க உதவினார்கள். அதை தொடர்ந்து சேசிங் செய்த நெதர்லாந்து முடிந்தளவுக்கு போராடியும் 47.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 250 ரன்கள் மட்டுமே எடுத்து ஆறுதல் வெற்றியை பதிவு செய்ய முடியாமல் வெளியேறியது.

- Advertisement -

அசத்தும் இந்தியா:
அந்த அணிக்கு அதிகபட்சமாக தேஜா நிதமன்ரு 54 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக பும்ரா, ஜடேஜா, சிராஜ், குல்தீப், ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அந்த வகையில் ரசிகர்களுக்கு தீபாவளி பரிசு கொடுத்த இந்தியா சொந்த மண்ணில் நடைபெறும் இத்தொடரில் தோல்வியே சந்திக்காமல் நாக் அவுட் சுற்றில் விளையாட தயார் என்று எதிரணிகளுக்கு காண்பித்துள்ளது.

இந்நிலையில் நீண்ட நாட்களாக எக்ஸ்ட்ரா பவுலர்களை சோதனை செய்ய வேண்டும் என்று நினைத்ததாக தெரிவிக்கும் ரோஹித் சர்மா இப்போட்டியில் அதற்காகவே தாம் உட்பட 9 வீரர்களை பந்து வீச வைத்ததாக கூறியுள்ளார். இது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “இத்தொடரின் துவக்கத்திலிருந்தே நாங்கள் ஒரு சமயத்தில் ஒரு போட்டியில் மட்டும் கவனம் செலுத்துகிறோம். இந்த பெரிய தொடரில் நாங்கள் நீண்ட தொலைவை பற்றி சிந்திக்கவில்லை”

- Advertisement -

“வெவ்வேறு மைதானங்களின் சூழ்நிலைகளுக்கு எங்களை உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை சிறப்பாக செய்து வருகிறோம். இந்த 9 போட்டிகளில் நாங்கள் நன்றாக விளையாடியது மகிழ்ச்சியை கொடுக்கிறது. இன்று வரை நாங்கள் அசத்தியுள்ளோம். இதற்கு பல்வேறு வீரர்கள் வெவ்வேறு சமயங்களில் சிறப்பாக விளையாடியது காரணமாகும். அதுவே ஒரு அணிக்கு நல்ல அறிகுறியாகும். இங்குள்ள மைதானங்கள் எங்களுக்கு தெரியும் என்றாலும் வெவ்வேறு எதிரணிகளை சந்திப்பது சவாலாகும்”

இதையும் படிங்க: நெதர்லாந்தை வீழ்த்தி நியூஸிலாந்துக்கு எச்சரிக்கை விடுத்த இந்தியா.. கங்குலி படையை மிஞ்சி சரித்திர சாதனை

“முதல் 4 போட்டிகளில் நாங்கள் முதலில் பேட்டிங் செய்த செய்த நிலையில் எஞ்சிய வேலைகளை எங்களுடைய பவுலர்கள் பார்த்துக் கொண்டனர். இப்போது எங்கள் மீதிருக்கும் எதிர்பார்ப்பை ஒதுக்கி வைத்து விட்டு எங்களுடைய வேலையை செய்வதில் கவனம் செலுத்துகிறோம். களத்தில் நாங்கள் மகிழ்ச்சியுடன் விளையாடுவதே வெற்றிகரமான செயல்பாடுகளில் எதிரொலிக்கிறது. இன்று 9 பவுலர்களை பயன்படுத்தினோம். இது முக்கியமாகும். இதை நினைத்துக் கொண்டிருந்த எங்களுக்கு இப்போட்டியில் செய்ய வாய்ப்பு கிடைத்தது” என்று கூறினார்.

Advertisement