நெதர்லாந்தை வீழ்த்தி நியூஸிலாந்துக்கு எச்சரிக்கை விடுத்த இந்தியா.. கங்குலி படையை மிஞ்சி சரித்திர சாதனை

IND vs NED 3
Advertisement

இறுதி கட்டத்தை எட்டியுள்ள ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 12ஆம் தேதி மதியம் 2 மணிக்கு பெங்களூரு நகரில் நடைபெற்ற 45வது மற்றும் கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. அதில் ஏற்கனவே வெளியேறிய நெதர்லாந்து ஆறுதல் வெற்றி பெறுவதற்காக விளையாடிய நிலையில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு 100 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அனைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த கேப்டன் ரோஹித் சர்மா 61 ரன்களும் சுப்மன் கில் 51 ரன்களும் நல்ல துவக்கத்தை கொடுத்தனர். அந்த நிலைமையில் வந்த விராட் கோலி 51 ரன்களில் அவுட்டானாலும் அடுத்ததாக ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் நெதர்லாந்து பவுலர்களை மிகச்சிறப்பாக எதிர்கொண்டு இந்தியா 400 ரன்கள் தாண்டுவதற்கு உதவினர்.

- Advertisement -

சாதனை வெற்றி:
அதில் கேஎல் ராகுல் உலக கோப்பையில் அதிவேக சதமடித்த இந்திய வீரராக சாதனை படைத்து 102 (64) ரன்கள் விளாசி அவுட்டானர். மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் சதமடித்து 128* (94) ரன்கள் விளாசி சூப்பர் ஃபேன்சிங் கொடுத்தார். அதனால் 50 ஓவர்களில் இந்தியா 410/4 ரன்கள் எடுத்த நிலையில் நெதர்லாந்து சார்பில் அதிகபட்சமாக பஸ் டீ லீடி 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதைத்தொடர்ந்து 411 என்ற கடினமான இலக்கை துரத்திய நெதர்லாந்துக்கு பரதேசி ஆரம்பத்திலேயே 4 ரன்களில் சிராஜ் வேகத்தில் ஆட்டமிழந்தார். அந்த நிலையில் மேக்ஸ் ஓ’தாவுத் 30, கோலின் ஆகர்மேன் 35, எங்கல்பேர்ச்ட் 45 ரன்களில் அவுட்டாகி பெரிய ரன்களை குவிக்காமல் பின்னடைவை ஏற்படுத்தினர். போதாகுறைக்கு அடுத்ததாக வந்த கேப்டன் எட்வர்ட்ஸ் 17 ரன்களில் விராட் கோலி வேகத்தில் அவுட்டாக பிரதம எதிர்பார்க்கப்பட்ட பஸ் டீ லீடி 12 ரன்களில் பும்ரா வேகத்தில் கிளீன் போல்டானார்.

- Advertisement -

அதனால் 144/5 என்ற சரிவை சந்தித்த அந்த அணிக்கு லோயர் மிடில் ஆர்டரில் முடிந்தளவுக்கு போராடிய தேஜா நிதமன்ரு அதிரடியாக 54 ரன்கள் எடுத்து கேப்டன் ரோகித் சர்மா சுழலில் அவுட்டானார். அதன் காரணமாக 47.5 ஓவரிலேயே 250 ரன்களுக்கு நெதர்லாந்தை சுருட்டிய இந்தியா 160 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இதையும் படிங்க: ரசிகர்கள் கோரிக்கையை லைவாக நிறைவேற்றிய ரோஹித்.. 7 வருடம் கழித்து மேஜிக் செய்த கிங் கோலி.. கொண்டாடிய அனுஷ்கா

அதனால் 9 லீக் போட்டிகளிலும் 9 வெற்றியை பதிவு செய்த இந்தியா இத்தொடரில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக சாதனை படைத்து செமி ஃபைனலில் நியூசிலாந்து எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என்பதை காட்டியுள்ளது. சொல்லப்போனால் இதன் வாயிலாக உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு தொடரில் இந்தியா தங்களுடைய அதிகபட்ச தொடர்ச்சியான வெற்றிகளை (9) பதிவு செய்து புதிய சரித்திர சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் கடந்த 2003 உலகக் கோப்பையில் கங்குலி தலைமையில் தொடர்ச்சியாக 8 வெற்றிகளை இந்தியா பதிவு செய்ததே முந்தைய சாதனையாகும்.

Advertisement