
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இரண்டாவது குவாலிபயர் போட்டியில் விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி யானது ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி ஐபிஎல் தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. அதன்பின்னர் நாளை ஜூன் 3-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற இருக்கும் மாபெரும் இறுதிப்போட்டியில் விளையாட இருக்கிறது.
பஞ்சாப் கிங்ஸ் அணி பெற்ற இந்த பிரமாதமான வெற்றி பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய மும்பை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களை குவித்தது. பின்னர் 204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி 19 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 207 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் பிரமாதமான வெற்றியை பெற்றது.
இந்த போட்டியின் போது பஞ்சாப் அணி சார்பாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 41 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர் என 87 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாகவே பஞ்சாப் அணி தற்போது இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்நிலையில் நேற்றைய போடி முடிந்து இரு அணி வீரர்களும் கை கொடுக்கும் போது ஷ்ரேயாஸ் ஐயரை நோக்கி ஷஷாங்க் சிங் வந்தததும் அவரைப் பார்த்து “என் கண் முன் வராதே”, “இங்கிருந்து போ” என்பது போல ஷ்ரேயாஸ் ஐயர் கண்டித்தார். அதற்கு காரணம் யாதெனில் :
இதையும் படிங்க : இப்படி கத்தாதீங்கன்னு சொல்லியும் கேட்காம.. விராட் கோலி எமோஷனை காட்ட இதான் காரணம்.. ஏபிடி பேட்டி
நேற்றைய போட்டியின் போது முக்கியமான நேரத்தில் களமிறங்கிய ஷஷாங்க் சிங் போட்டியின் முக்கியமான சூழலில் பொறுமையாக ஓடி ரன் அவுட்டானார். அதனால் ஏமாற்றம் அடைந்த ஷ்ரேயாஸ் ஐயர் போட்டி முடிந்ததும் அதன் கோபத்தை வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.