ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. ஜூன் மூன்றாம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெறும் அந்தப் போட்டியில் வென்று முதல் முதலாக கோப்பையை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஒருவேளை அந்தப் போட்டியில் ஆர்சிபி மற்றும் வென்றுவிட்டால் அதை விராட் கோலி தலைமையில் வெறித்தனமாக கொண்டாடி தீர்க்க பெங்களூரு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
ஏனெனில் 2008 முதல் 17 வருடங்களாக போராடி வரும் அந்த அணி முக்கிய நேரங்களில் சொதப்பி வெற்றியைக் கோட்டை விட்டு வருகிறது. அதனால் எதிரணிகளால் கடுமையாக கிண்டல் செய்யப்பட்டு வரும் ஆர்சிபி இம்முறை ரஜத் படிதார் தலைமையில் அபாரமாக விளையாடி ஃபைனலுக்கு வந்துள்ளது. எனவே இம்முறை அந்த அணி கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சொல்லி பாத்துட்டேன்:
அப்படி வென்றால் விராட் கோலி மைதானம் முழுவதும் சுற்றி வந்து வெற்றியை வெறித்தனமாக கொண்டாடுவார் என்று உறுதியாக நம்பலாம். ஏனெனில் சாதாரணமாக ஒரு விக்கெட் விழுந்தாலே அதை அவர் வெறித்தனமாக கத்தி கூச்சலிட்டு கொண்டாடக் கூடியவர். அவருடைய அந்த ஆக்ரோஷமான கொண்டாட்டம் ஒரு தரப்பு ரசிகர்களுக்கு பிடித்தாலும் மற்றொரு தரப்பினருக்கு பிடிப்பதில்லை.
அதே போல தோல்வியை சந்தித்தாலும் விராட் கோலி மிகவும் சோகமான ரியாக்சனை கொடுத்து விடுவார். மொத்தத்தில் தோனி போல விராட் கோலி பெரும்பாலான நேரங்களில் தம்முடைய உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாதவராகவே விளையாடி வருகிறார். இந்நிலையில் உணர்வுகளை வெளிக்காட்டாமல் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள் என்று விராட் கோலியிடம் ஆலோசனை சொன்னதாக ஏபி டீ வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
ஏபிடி கருத்து:
இருப்பினும் விராட் கோலி அதைக் கேட்காமல் தொடர்ந்து கொண்டாடுவதற்கான காரணம் பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அதைப்பற்றி நாங்கள் பலமுறை பேசியுள்ளோம். நீங்கள் ஏன் ஒரு ஐபிஎல் தொடரிலாவது உணர்வுகளை விட்டு வெளியே வந்து ரிலாக்ஸாக விளையாடக் கூடாது என்று விராட் கோலியிடம் கூறியுள்ளேன். அதற்கு அது மோசமான ஐடியா கிடையாது என்று அவர் சொன்னார்”
இதையும் படிங்க: வெறும் 33 வயதில் ஓய்வு.. தெ.ஆ சரவெடி நாயகன் க்ளாஸென் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வான காரணம் அறிவிப்பு
“ஆனால் இதுவரை அவர் அதைக் கடைப் பிடித்ததாக தெரியவில்லை. அவர் என்னுடைய பேச்சைக் கேட்கவில்லை. எனவே அது அவருக்கு இயற்கையான விஷயம் என்று நினைக்கிறேன். நாளின் இறுதியில் அதுவும் அவருடைய பலங்களில் ஒன்றாக இருக்கிறது. இவ்வாறு செயல்பட்டு தான் அவர் இந்த இடத்திற்கு வந்துள்ளார். அவர் தன்னுடைய இதயத்தை சட்டையின் மேலே வைத்து விளையாடக் கூடியவர். அவர் அமைதியாக விளையாடுவதை நான் பார்க்க விரும்புகிறேன். இருப்பினும் அது பற்றி அவரிடம் பேசியது தவறு என்று நினைக்கிறேன்” எனக் கூறினார்.



