243 ரன்ஸ்.. 26.75 கோடி வீணாகல.. சுயநலமின்றி குஜராத்தை நொறுக்கிய ஸ்ரேயாஸ்.. மேக்ஸ்வெல் மோசமான சாதனை

Shreyas Iyer
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மார்ச் 25ஆம் தேதி அகமதாபாத் நகரில் ஐந்தாவது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப்புக்கு பிரப்சிம்ரன் சிங் 5 ரன்னில் ரபாடா வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.

அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடினார். மறுபுறம் இளம் துவக்க வீரர் பிரியான்ஸ் ஆர்யா அதிரடியாக விளையாடி இரண்டாவது விக்கெட்டுக்கு 26 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 47 (23) ரன்களில் அவுட்டானார். அதற்கடுத்ததாக வந்த ஒவ்வொரு ஓமர்சாயை 16 ரன்னில் காலி செய்த தமிழக வீரர் சாய் கிஷோர் அதற்கடுத்ததாக வந்த கிளன் மேக்ஸ்வெலை கோல்டன் டக் அவுட்டாக்கினார்.

- Advertisement -

ஸ்ரேயாஸ் அசத்தல்:

இதையும் சேர்த்து ஐபிஎல் தொடரில் 19ஆவது முறையாக அவர் ஜீரோ ரன்னில் அவுட்டானார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையை மேக்ஸ்வெல் படைத்துள்ளார். இதற்கு முன் தினேஷ் கார்த்திக் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தலா 18 முறை டக் அவுட்டானதே முந்தைய சாதனையாகும். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் மறுபுறம் அசத்தலாக விளையாடிய ஸ்ரேயாஸ் 27 பந்தில் அரை சதம் அடித்தார்.

எதிர்புறம் வந்த மார்கஸ் ஸ்டோனிஸ் 20 ரன்களில் அவுட்டானார். அதற்கடுத்ததாக வந்த சசாங் சிங் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடிய ரன்கள் குவித்தார். இந்தப் பக்கம் தொடர்ந்து அசத்திய ஸ்ரேயாஸ் சதத்தை நெருங்கினார். குறிப்பாக 19வது ஓவரின் முடிவில் 97 ரன்கள் எடுத்த அவர் சதத்தை தொடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

26.75 கோடி வீணாகல:

ஆனால் எதிர்ப்புறம் இருந்த சசாங் கடைசி ஓவரில் சிராஜை அடித்து நொறுக்கி 23 ரன்கள் குவித்து மொத்தம் 44* (16) ரன்கள் விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் சதத்தை நழுவ விட்ட ஸ்ரேயாஸ் 5 பௌண்டரி 9 சிக்ஸருடன் 97* (42) ரன்களில் சுயநலமின்றி புன்னகையான முகத்துடன் இன்னிங்ஸ் முடிவில் வெளியேறினார். அவரது அற்புதமான ஆட்டத்தால் 20 ஓவரில் பஞ்சாப் 243-5 ரன்கள் குவித்தது. குஜராத்துக்கு அதிகபட்சமாக சாய் கிசோர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையும் படிங்க: சச்சின் ஓய்வு பெற்ற..12 வருடம் கழித்து.. வெ.இ, தெ.ஆ அணிகளுக்கு எதிராக விளையாடும் இந்தியா.. வெளியான அறிவிப்பு

இதன் வாயிலாக அகமதாபாத் மைதானத்தில் டி20 கிரிக்கெட்டில் சிறந்த ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற இந்தியாவின் (2023இல் நியூஸிலாந்துக்கு எதிராக 224/4) சாதனையை உடைத்து பஞ்சாப் புதிய சாதனை படைத்தது. மேலும் 26.75 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட ஸ்ரேயாஸ் முதல் போட்டியிலேயே பஞ்சாப் நம்பிக்கையை வீணடிக்காமல் அசத்தியுள்ளார். 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை இந்தியா வெல்ல உதவிய அவர் தனது ஃபார்மை தொடர்கிறார்.

Advertisement