சச்சின் ஓய்வு பெற்ற..12 வருடம் கழித்து.. வெ.இ, தெ.ஆ அணிகளுக்கு எதிராக விளையாடும் இந்தியா.. வெளியான அறிவிப்பு

IND vs RSA
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபியை வென்று சாதனைப் படைத்தது. 2024 டி20 உலகக் கோப்பையையும் ரோஹித் தலைமையில் வென்ற இந்தியா இதையும் சேர்த்து 10 மாதங்களுக்குள் 2 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது. அந்த அடுத்தடுத்த வெற்றிகள் ரசிகர்களைக் கொண்டாட வைத்தது. அடுத்ததாக இந்திய வீரர்கள் அனைவரும் ஐபிஎல் 2025 டி20 தொடரில் விளையாடி வருகின்றனர்.

அதை முடித்துக்கொண்டு இங்கிலாந்து மண்ணில் ஜூன் மாதம் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்தத் தொடரில் இந்தியா வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஏனெனில் கடந்த நியூசிலாந்து, ஆஸ்திரேலிய தொடர்களில் மோசமாக தோற்ற இந்தியா 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறியது.

- Advertisement -

12 வருடங்கள் கழித்து:

இந்நிலையில் அந்த இங்கிலாந்து தொடருக்குப் பின் இந்தியா சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாட உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில் முதலாவதாக வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாட உள்ளது.

அந்தப் போட்டிகள் வரும் அக்டோபர் 2 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மொஹாலி மற்றும் கொல்கத்தாவில் நடைபெற உள்ளதாக பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். கடைசியாக இந்தியா 2013ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடியது. அந்தத் தொடருடன் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஓய்வுப் பெற்றதை மறக்க முடியாது.

- Advertisement -

2 சுற்றுப் பயணங்கள்:

அதற்கு பின் 12 வருடங்கள் கழித்து தற்போது சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா விளையாட உள்ளது. அது முடிந்ததும் தென்னாபிரிக்காவுக்கு எதிராக 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது. அதில் 2 டெஸ்ட் போட்டிகள் டெல்லி மற்றும் கௌகாத்தி நகரில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பணத்தால் கிரிக்கெட் அறிவை வாங்க முடியுமா? அதிர்ந்த லாங்கர்.. லக்னோ ஓனர் மீது ரசிகர்கள் அதிருப்தி

அதன் பின் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நவம்பர் 30, டிசம்பர் 3, 6 ஆகிய தேதிகளில் ராஞ்சி, ராய்ப்பூர், விசாகப்பட்டினம் மைதானங்களில் நடைபெற உள்ளது. இறுதியில் 2026 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் 5 போட்டிகள் 20 ஓவர் தொடர் டிசம்பர் 9, 11, 14, 17, 19 தேதிகளில் நடைபெற உள்ளது. அந்தப் போட்டிகள் முறையே விசாகப்பட்டினம், கௌகாத்தி, முல்லான்பூர், திருவனந்தபுரம் இந்தூர் நகரங்களில் நடைபெற உள்ளது. இது பற்றிய இறுதி அட்டவணை இன்னும் சில மாதங்களில் வெளியாகும்.

Advertisement