- Advertisement -
இந்திய கிரிக்கெட்

IND vs AUS : ஆஸ்திரேலிய தொடரிலிருந்து விலகும் முக்கிய வீரர், மாற்று வீரர் யார்? வெளியான தகவல் இதோ

வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை வரும் பிப்ரவரி 9ஆம் தேதி முதல் நாக்பூரில் துவங்குகிறது. உலகின் டாப் 2 அணிகளான இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதுவதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்தொடர் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை பைனலுக்கு தகுதி பெறும் அணிகளையும் தீர்மானிக்க உள்ளது. அதில் ஏற்கனவே புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா பைனல் வாய்ப்பை உறுதி செய்து விட்டதால் 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் தங்களை சொந்த மண்ணில் தோற்கடித்த இந்தியாவை இம்முறை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து 2004க்குப்பின் தொடரை வெல்ல போராட உள்ளது.

மறுபுறம் இத்தொடரில் குறைந்தபட்சம் 3 போட்டிகளை வென்றால் தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமையில் களமிறங்கும் இந்தியா 2012க்குப்பின் சொந்த மண்ணில் உலகின் எந்த அணிக்கு எதிராகவும் ஒரு டெஸ்ட் தொடரில் தோற்றதில்லை. அந்த பலத்துடன் தன்னம்பிக்கையுடன் இந்தியா களமிறங்க காத்திருக்கும் நிலையில் அதற்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா இல்லாதது பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அந்த நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் மற்றொரு முக்கிய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தால் வெளியேறினார்.

- Advertisement -

விலகிய ஸ்ரேயாஸ்:
அதனால் இந்த தொடரில் அவர் பங்கேற்பாரா என்பது கடந்த ஒரு வாரமாகவே சந்தேகமாக இருந்து வருகிறது. அதை தொடர்ந்து வழக்கம் போல தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்ற அவர் காயத்திலிருந்து குணமடைவதற்கான வேலைகளில் ஈடுபட்டார். அந்த நிலையில் பார்டர் – கவாஸ்கர் கோப்பை துவங்குவதற்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே எஞ்சியிருப்பதால் அதில் விளையாட முடியுமா என்று அவருக்கு சமீபத்தில் சோதனை நடத்தப்பட்டது. அதில் முழுமையாக முதுகுப்பகுதியில் சந்தித்த காயத்திலிருந்து குணமடையாததால் நாக்பூரில் துவங்கும் முதல் போட்டியிலிருந்து ஸ்ரேயாஸ் ஐயர் விலகுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அவருக்கு பதிலாக அதிரடியாக விளையாடக்கூடிய சூரியகுமார் யாதவ் அல்லது சுப்மன் கில் விளையாடுவார்கள் என்ற செய்திகளும் வெளியாகியுள்ளது. இது பற்றி பிசிசிஐ அதிகாரி ஒருவர் பேசியது பின்வருமாறு. “2021 இறுதியில் இந்தியாவுக்கு நியூசிலாந்து வந்த போது மயங் அகர்வாலுடன் கேஎல் ராகுல் ஓப்பனிங் வீரராக களமிறங்குவதற்கும் சுப்மன் கில் மிடில் ஆர்டரில் விளையாடுவதற்கும் நாங்கள் முடிவெடுத்தோம். ஆனால் அப்போது ராகுல் காயமடைந்ததால் சுப்மன் கில் தொடக்க வீரராக களமிறங்கி பின்னர் காயமடைந்தார். மேலும் இந்தியா ஏ அணிக்காக ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருந்த போது வெஸ்ட் இண்டீஸ் ஏ தொடரில் சுப்மன் கில் மிடில் ஆர்டரில் விளையாடி இரட்டை சதமும் அடித்துள்ளார்”

- Advertisement -

“எனவே உண்மையாகவே மிடில் ஆர்டர் வீரரான அவர் நாளடைவில் தொடக்க வீரராக உருவாக்கப்பட்டுள்ளார். அதனால் அவர் மீண்டும் மிடில் ஆர்டரில் விளையாடுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஒருவேளை நேதன் லயன் பந்தை சுழற்றினால் தன்னுடைய புட் ஒர்க்கை பயன்படுத்தி அவரை சூரியகுமார் யாதவ் அடித்து நொறுக்க முடியும். ஆனால் ஹேசல்வுட், கமின்ஸ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சுப்மன் கில் சிறப்பாக செயல்பட கூடியவர்” என்று கூறினார்.

அதாவது போட்டியின் சூழ்நிலைக்கேற்ப அந்த இருவரில் யாராவது ஒருவர் கடைசி நேரத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் இடத்தில் விளையாட வைக்க இந்திய அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. முன்னதாக கடந்த 2021இல் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான ஸ்ரேயாஸ் ஐயர் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக தடுமாறினாலும் சுழல் பந்து வீச்சுக்கு எதிராக மிகச் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: ஐசிசி தரவரிசையில் புதிய உச்சம் தொட்ட சூர்யகுமார், நூலிழையில் காத்திருக்கும் மெகா உலக சாதனை

அந்த நிலைமையில் இந்த பார்டர் – காவாஸ்கர் கோப்பை தொடரில் பெரும்பாலும் ஸ்பின்னர்கள் அதிகம் அதிகத்தை ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற ஒரு சுழல் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்ளும் வீரர் முதல் போட்டியில் வெளியேறியுள்ளது இந்தியாவுக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

- Advertisement -