விராட் கோலி மற்றும் தவானுடன் அசத்தலான சாதனை பட்டியலில் இடம்பிடித்த – ஷ்ரேயாஸ் ஐயர் (டாப் 5 இதோ)

Shreyas-Iyer
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி நேற்று நடைபெற்ற முடிந்தது. பரபரப்பாக நடைபெற்ற இந்த முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்களை குவித்தது.

IND vs WI Shikhar Dhawan Nicholas Pooran

- Advertisement -

பின்னர் 309 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியும் சரியான போட்டியை அளிக்கவே போட்டி கடைசி பந்து வரை சென்று இந்திய அணி 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதிவரை போராடிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 305 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது/ இதனால் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் இந்திய அணியானது ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி நாளை இதே மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி சார்பாக அரைசதமடித்த ஷ்ரேயாஸ் ஐயர் இரண்டு முக்கிய சாதனைகளை படைத்துள்ளார்.

Shreyas

அந்த சாதனைகள் யாதெனில் : இதுவரை இந்திய அணி சார்பாக அதிவேகமாக ஒருநாள் போட்டிகளில் 1000 (ஆயிரம் ரன்களை) கடந்தவர்கள் என்ற பட்டியலில் கோலி மற்றும் தவான் ஆகியோர் முதலிடத்தில் உள்ளனர். அவர்கள் இருவருமே ஒருநாள் போட்டிகளில் தங்களது 24 ஆவது இன்னிங்சில் 1000 ரன்களை எட்டினர்.

- Advertisement -

அதே வேளையில் தற்போது அவர்களுக்கு அடுத்தபடியாக ஸ்ரேயாஸ் ஐயர் தனது 25-வது இன்னிங்ஸில் ஆயிரம் ரன்களை எட்டியுள்ளார். அவர் இந்த சாதனை பட்டியலில் நவ்ஜோத் சிங்-வுடன் இணைந்துள்ளார் என்பது கூடுதல் சிறப்பம்சம். அதேபோன்று 25 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் அதிகமுறை 50+ ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் நவ்ஜோத் சிங்கை தொடர்ந்து ஷ்ரேயாஸ் 11முறை 50+ ரன்களுடன் (10 அரைசதம், 1 சதம்) அந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : வீடியோ : இந்திய அணியின் டிரெஸ்ஸிங் ரூம்க்கு யாரு வந்திருக்காங்க பாருங்க? – பி.சி.சி.ஐ வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ

ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்காக மிக வேகமாக 1000 ரன்களை கடந்தவர்களின் டாப் 5 பட்டியல்:

1) விராட் கோலி மற்றும் ஷிகர் தவான் – 24 இன்னிங்ஸ்
2) நவ்ஜோத் சிங் சித்து மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் – 25 இன்னிங்ஸ்
3) கேஎல் ராகுல் – 27 இன்னிங்ஸ்
4) எம்எஸ் தோனி – 29 இன்னிங்ஸ்
5) அம்பதி ராயுடு – 29 இன்னிங்ஸ்

Advertisement