வீடியோ : இந்திய அணியின் டிரெஸ்ஸிங் ரூம்க்கு யாரு வந்திருக்காங்க பாருங்க? – பி.சி.சி.ஐ வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ

Shikhar-Dhawan
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி நேற்று ட்ரினிடாட் நகரில் நடைபெற்று முடிந்தது.

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி த்ரில் வெற்றியை பெற்றது. அதோடு 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரிலும் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனான ஷிகார் தவான் 97 ரன்கள் அடித்து அசத்தியதன் மூலம் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை இதே குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளதால் தற்போது இரு அணி வீரர்களும் அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த முதலாவது ஒருநாள் போட்டி முடிவடைந்த நிலையில் இந்திய வீரர்களின் உடைமாற்றும் அறைக்கு வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரைன் லாரா சர்ப்ரைஸாக வந்து இந்திய வீரர்களை சந்தித்து பேசியுள்ளார். இதனை இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ-யும் வீடியோவாக தங்களது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

- Advertisement -

அப்படி அந்த வீடியோவினை பகிர்ந்த பி.சி.சி.ஐ : இந்திய அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு யார் வந்திருக்கிறார் என்று பாருங்கள் என தலைப்பினை இட்டு அந்த வீடியோவை பகிர்ந்துள்ளது. அதில் இந்தியா வீரர்களுடன் லாரா அரட்டை அடிப்பதை காண முடிகிறது.

இதையும் படிங்க : IND vs WI : என்ன இருந்தாலும் லார்ட் தாகூரிடம் அந்த பவர் இருக்கு – வெற்றிக்கு பின் பாராட்டிய முன்னாள் வீரர்

அதோடு இதற்கு முன்னதாக வெளியிடப்பட்ட ஒரு புகைப்படத்தில் ராகுல் டிராவிட் மற்றும் லாரா ஆகியோர் ஒன்றாக இருப்பது போன்றும் ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement