IND vs WI : என்ன இருந்தாலும் லார்ட் தாகூரிடம் அந்த பவர் இருக்கு – வெற்றிக்கு பின் பாராட்டிய முன்னாள் வீரர்

Shardhul Thakur India Dhawan Shreyas Iyer
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வெறும் 3 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா திரில் வெற்றியை பெற்றது. ஜூலை 22-ஆம் தேதியான நேற்று குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 308/7 ரன்களை சேர்த்தது. கேப்டன் ஷிகர் தவானுடன் 119 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அற்புதமான தொடக்கம் கொடுத்த சுப்மன் கில் அதிரடியாக 64 (53) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

Dhawan

- Advertisement -

அடுத்ததாக களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயருடன் ஜோடி சேர்ந்து 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஷிகர் தவான் 10 பவுண்டரி 3 சிக்சருடன் 97 (99) ரன்களில் அவுட்டாகி சதமடிக்கும் வாய்ப்பை கோட்டை விட்டார். அடுத்த சில ஓவர்களில் ஸ்ரேயாஸ் ஐயர் 54 (57) ரன்களில் ஆட்டமிழக்க மிடில் ஆர்டரில் வந்த சஞ்சு சாம்சன் 12 (18) ரன்களிலும் சூர்யகுமார் யாதவ் 13 (14) ரன்களிலும் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். இறுதியில் தீபக் ஹூடா 27 (32) ரன்களும் அக்சர் பட்டேல் 21 (21) ரன்களும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக அல்சாரி ஜோசப் மற்றும் மோட்டி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

இந்தியா முன்னிலை:
அதை தொடர்ந்து 309 என்ற இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீசுக்கு தொடக்க வீரர் சாய் ஹோப் 7 (18) ரன்களில் அவுட்டான நிலையில் சமர் ப்ரூக்ஸ் – கெய்ல் மேயர்ஸ் ஜோடி 117 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தது. அதில் 46 (61) ரன்களில் ப்ரூக்ஸ் ஆட்டமிழக்க அடுத்த ஓவரிலேயே கெய்ல் மேயர்ஸ் 75 (68) ரன்களில் அவுட்டானார். அந்த நிலைமையில் வந்த நிக்கோலஸ் பூரன் 25 (26) ரோவ்மன் போவல் 6 (7) என முக்கியம் பேட்ஸ்மென்கள் சொற்ப ரன்களில் அவுட்டானாலும் பிரண்டன் கிங் 54 (66) ரன்கள் எடுத்து வெற்றிக்காக போராடி ஆட்டமிழந்தார்.

Siraj

இறுதியில் அகில் ஹோசன் 32* (32) ரன்களும் ஷெபார்ட் 39* (25) ரன்களும் அதிரடியாக எடுத்து போராடிய போதிலும் முகமது சிராஜ் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட போது 11 ரன்கள் மட்டுமே எடுத்த வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவர்களில் 305/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் திரில் வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* (3) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு ஷிகர் தவான் உட்பட நிறைய வீரர்கள் பங்காற்றிய நிலையில் பந்துவீச்சில் சிராஜ், சஹால், தாகூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

லார்ட் தாகூர்:
குறிப்பாக வழக்கம் போல ஷார்துல் தாகூர் இதர பவுலர்களை காட்டிலும் 6.75 என்ற எக்கனாமியில் அதிக ரன்களை வழங்கினார். ஆனாலும் 2-வது விக்கெட்டுக்கு 117 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மிரட்டிய ப்ரூக்ஸ் – மேயர்ஸ் ஜோடியை முக்கிய நேரத்தில் பிரித்து போட்டியை இந்தியாவின் பக்கம் கொண்டு வந்தார். அதில் 24-வது ஓவரில் ப்ரூக்சை அவுட் செய்த அவர் தன்னுடைய அடுத்த ஓவரிலேயே மேயர்ஸையும் காலி செய்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்தது வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

Shardul-Thakur

இந்நிலையில் எப்போதுமே ரன்களை வாரி வழங்கும் வகையில் பந்து வீசினாலும் ரசிகர்களால் லார்ட் என கொண்டாடப்படும் ஷார்துல் தாக்கூரிடம் பார்ட்னர்ஷிப்பை உடைப்பது, முக்கிய நேரத்தில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை எடுப்பது போன்ற திறமைகள் உள்ளதாக முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா பாராட்டியுள்ளார். இது பற்றி இப்போட்டிக்கு பின் தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“லார்ட் தாகூரிடம் விக்கெட்களை எடுக்கும் திறமை உள்ளது. ப்ரூக்ஸ் – மேயர்ஸ் ஆகியோர் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்த போது விக்கெட் எடுத்து அந்த ஜோடியை பிரித்த அவர் அவர்களுடைய 2 விக்கெட்டுகளையும் எடுத்தார். இருப்பினும் அந்த 2 பந்துகளும் தரமான பந்துகள் என்று சொல்ல முடியாது. ஒன்று சற்று ஒயிட் போல இருந்தது, மற்றொன்று ஷார்ட் பந்தாக இருந்தது. சொல்லப்போனால் அவர் ரன்களை கொடுக்கிறார் என்பதாலேயே ஷிகர் தவான் அவருக்கு முழுமையான 10 ஓவர்களையும் கொடுக்கவில்லை. ஆனால் அவர் அதிக ரன்களை கொடுக்கிறார் என்பதற்காக விக்கெட்டுகள் எடுக்காமல் இருப்பதில்லை என்பது முக்கியமானதாகும்” என்று கூறினார்.

இதையும் படிங்க : IND vs WI : கிரிக்கெட் வரலாற்றில் இலங்கையின் வித்யாசமான உலக சாதனையை சமன் செய்த இந்தியா

அதேபோல் சிறப்பாக பந்து வீசிய சிராஜ் மற்றும் சஹால் ஆகியோரையும் அவர் பாராட்டி பேசியது பின்வருமாறு. “எதிரணி பேட்டிங் செய்ய துவங்கியதுமே முகமது சிராஜ் ஆரம்பத்திலேயே சிறப்பாக பந்து வீசினார். குறிப்பாக ஏற்கனவே சுமாரான பார்மில் தவிக்கும் ஷாய் ஹோப்பை ஆரம்பத்திலேயே காலி செய்து நல்ல தொடக்கம் கொடுத்தார். அதே போல் 2 விக்கெட்டுகள் எடுத்த சஹாலையும் பாராட்டாமல் இருக்க முடியாது” என்று கூறினார்.

Advertisement