IND vs WI : கிரிக்கெட் வரலாற்றில் இலங்கையின் வித்யாசமான உலக சாதனையை சமன் செய்த இந்தியா

indvssl
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஜூலை 22-ஆம் தேதியான நேற்று நடைபெற்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா பொறுப்புடன் செயல்பட்டு 50 ஓவர்களில் 308/7 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான் – சுப்மன் கில் 119 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து சூப்பரான தொடக்கம் கொடுத்தபோது 6 பவுண்டரி 2 சிக்சருடன் சுப்மன் கில் 64 (53) ரன்களில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யருடன் மீண்டும் ஜோடி சேர்ந்த சிகர் தவான் 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை மேலும் வலுப்படுத்திய நிலையில் 10 பவுண்டரி 3 சிக்சருடன் 97 (99) ரன்களில் அவுட்டாகி சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.

Dhawan 2

- Advertisement -

அடுத்த சில ஓவர்களில் ஸ்ரேயாஸ் அய்யர் 54 (57) ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 13 (14) சஞ்சு சாம்சன் 12 (18) என சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினர். கடைசியில் தீபக் ஹூடா 27 (32) ரன்களும் அக்ஷர் பட்டேல் 21 (21) ரன்களும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக அல்சாரி ஜோசப் மற்றும் மோட்டி ஆகியோர் தலா 2 விக்கெட்கள் எடுத்தனர்.

த்ரில் வெற்றி:
அதை தொடர்ந்து 309 என்ற இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீசுக்கு தொடக்க வீரர் ஷாய் ஹோப் 7 (18) ரன்களில் ஆட்டமிந்தாலும் அடுத்த ஜோடி சேர்ந்த கெய்ல் மேயர்ஸ் – சமர் ப்ரூக்ஸ் ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 117 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அபார தொடக்கம் கொடுத்தது. அதில் ப்ரூக்ஸ் 46 (61) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்த சில ஓவர்களில் மேயர்ஸ் 75 (68) ரன்களில் அவுட்டானார். அப்போது வந்த கேப்டன் நிக்கோலஸ் பூரன் 25 (26) ரன்களிலும் ரோவ்மன் போவல் 6 (7) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் மிடில் ஆர்டரில் 54 (66) ரன்கள் குவித்து வெற்றிக்கு போராடிய பிரண்டன் கிங் கடைசி நேரத்தில் அவுட்டானார்.

Siraj

இருப்பினும் கடைசி நேரத்தில் அகில் ஹொசைன் 32* (32) ரன்களும் ரோமரியா செபார்ட் 39* (25) ரன்களும் அதிரடியாக விளாசி வெற்றிக்காக போராடினர். குறிப்பாக கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட போது அதை வீசிய முகமது சிராஜ் 11 ரன்கள் மட்டுமே கொடுத்ததால் 50 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் 305/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா சார்பில் பந்துவீச்சில் சிராஜ், தாக்கூர், சஹால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் எடுத்தனர்.

- Advertisement -

7-வது கேப்டன்:
இந்த வெற்றிக்கு 97 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய ஷிகர் தவான் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். முன்னதாக இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வெடுப்பதால் கேப்டனாக செயல்படும் ஷிகர் தவான் இந்த வருடம் இந்தியாவை வழிநடத்தும் 7-வது கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Rahul

1. 2022 புத்தாண்டு துவங்கியபோது தென்னாப்பிரிக்க மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது போட்டியில் அப்போதைய கேப்டன் விராட் கோலி காயமடைந்ததால் கேஎல் ராகுல் கேப்டனாக செயல்பட்ட நிலையில் 3-வது போட்டிக்கு விராட் கோலி கேப்டனாக திரும்பினார்.

- Advertisement -

2. அதன்பின் சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கைக்கு எதிராக நடந்த தொடர்களில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்ட நிலையில் ஐபிஎல் 2022 தொடருக்கு பின் நடந்த தென்னாபிரிக்க டி20 தொடரில் அவர் ஓய்வெடுத்ததால் ரிஷப் பண்ட் கேப்டனாக செயல்பட்டார்.

Keshav-Maharaj-and-Rishabh-Pant

3. அதை தொடர்ந்து நடந்த அயர்லாந்து டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட்டு கோப்பையை வென்ற நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் கடைசி நேரத்தில் ரோகித் சர்மா விலகியதால் ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

வித்யாசமான சாதனை:
தற்போது ஷிகர் தவான் 7-வது கேப்டனாக செயல்படுவதால் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக கேப்டன்களைக் கொண்ட அணி என்ற இலங்கையின் ஆல்-டைம் வித்தியாசமான சாதனையை இந்தியா சமன் செய்துள்ளது. உலக அளவில் இதற்கு முன் கடந்த 2017இல் இலங்கை அணியில் வரலாற்றிலேயே முதல் முறையாக ஆஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சண்டிமால், உபுல் தரங்கா, ரங்கனா ஹெராத், லசித் மலிங்கா, சமீரா கபுகேந்திரா, திசாரா பெரேரா என 7 வீரர்கள் கேப்டனாக செயல்பட்டிருந்தார்கள்.

INDvsSl-1

இந்த 2 அணிகளுக்கு அடுத்ததாக ஜிம்பாவே (2017), இங்கிலாந்து (2011), ஆஸ்திரேலியா (2021) ஆகிய அணிகள் அதிகபட்சமாக தலா 6 கேப்டன்களை கொண்டிருந்தன. இந்திய வரலாற்றிலும் இதற்கு முன் கடந்த 1959இல் வினோ மன்கட், ஹேமு அதிகாரி, டட்டா கைக்வாட், பங்கஜ் ராய், குலாப்ராய் ராம்சன் ஆகிய 5 வீரர்கள் கேப்டனாக செயல்பட்டிருந்ததே அதிகபட்சமாக இருந்தது.

இதையும் படிங்க : IND vs WI : இவர்களுக்காகவா விராட் கோலியை நீக்க சொன்னிங்க, இளம் வீரர்களை விளாசும் ரசிகர்கள் – என்ன நடந்தது?

மேலும் தற்போது இந்திய அணியில் 7 மாதங்களிலேயே 7 கேப்டன்கள் செய்யப்பட்டுள்ளதால் எஞ்சிய 5 மாதங்களில் இதேபோல் புதிய கேப்டன் பொறுப்பேற்க அதிக வாய்ப்புள்ளது. எனவே இந்த சாதனையை உடைத்து முழுமையாக தன் வசமாக்கவும் இந்தியாவுக்கு வாய்ப்புள்ளது.

Advertisement