ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி விளையாட வாய்ப்பில்லை – காரணம் என்ன?

- Advertisement -

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது வரும் ஜூன் 13-ஆம் தேதி முதல் ஜூன் 20-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியும் அறிவிக்கப்பட்டது. அதில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

விராட் கோலி விளையாடுவதில் சந்தேகம் :

ஐ.பி.எல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட அவர்களுக்கு இந்த வாய்ப்பு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2027 உலக கோப்பை வரை விளையாட வேண்டும் என்று அவர்கள் இருவருமே விருப்பப்படுவதால் இந்த தொடருக்கான அணியிலும் அவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

- Advertisement -

ஆனால் இவ்வேளையில் கடைசி நேரத்தில் விராட் கோலி இந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரை தவறவிட வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2026 ஐ.பி.எல் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற இறுதிப்போட்டியில் 42 பந்துகளில் 75 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இந்த தொடரில் மட்டும் 16 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 56 ரன்கள் சராசரியுடன் 675 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அவரது சிறப்பான ஃபார்ம் இந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ஐ.பி.எல் தொடரின் இறுதி போட்டியில் விளையாடிய அவருக்கு தொடைப்பகுதியில் தசை பிடிப்பு காரணமாக காயம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய டி20 அணியில் சூரியகுமார் யாதவுக்கு பதிலாக இடம்பிடிக்கப்போகும் வீரர் யார் தெரியுமா? – விவரம் இதோ

இதனால் அடுத்த ஒரு மாதம் வரை அவர் ஓய்வெடுக்க வேண்டிய சூழல் இருப்பதினால் இந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரினை அவர் தவற விடுகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதேபோன்று மற்றொரு நட்சத்திர வீரரான ரோஹித் சர்மாவும் இந்த தொடரில் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது.

Advertisement