கிளன் மேக்ஸ்வெலை விட காட்டுத்தனமாக அடித்த ஸ்ரேயாஸ்.. புதிய சாதனை.. இலங்கையை நொறுக்கிய இந்தியா

IND vs SL 3
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடரில் நவம்பர் 2ஆம் தேதி மதியம் 2 மணிக்கு மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 33வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. அதில் ஏற்கனவே 6 வெற்றிகளை பெற்ற இந்தியா 7வது வெற்றியை பதிவு செய்து செமி ஃபைனலுக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெறும் முனைப்புடன் களமிறங்கிய நிலையில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா முதல் ஓவரிலேயே மதுசங்கா வேகத்தில் 4 ரன்களில் ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் அடுத்ததாக வந்த விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் எதிர்புறம் என்ற மற்றொரு துவக்க வீரர் சுப்மன் கில் தம்முடைய பங்கிற்கு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

அசத்திய ஸ்ரேயாஸ்:
அந்த வகையில் இலங்கை பவலர்களை வெளுத்து வாங்கிய இந்த ஜோடியில் இருவருமே அரை சதம் கடந்து அசத்தார்கள். அதில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கில் 11 பவுண்டரி 2 சிக்சருடன் 2வது விக்கெட்டுக்கு 189 பார்ட்னர்ஷிப் அமைத்த போது 92 ரன்களில் ஆட்டமிழந்தார். அதே போலவே விராட் கோலியாவது சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் 11 பவுண்டரியுடன் 88 ரன்களில் அவுட்டாகி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தார்.

அவர்களைத் தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் நிதானமாக விளையாடி பெரிய ரன்கள் குவிக்க போராடினார்கள். ஆனாலும் அதில் 4வது விக்கெட்க்கு 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கேஎல் ராகுல் 21 ரன்களில் அவுட்டாகி சென்ற நிலையில் அடுத்ததாக வந்த சூரியகுமார் யாதவ் மீண்டும் 12 ரன்களில் அவுட்டாகி தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கத் தவறினார்.

- Advertisement -

இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் 50 ரன்கள் கடந்து டெத் ஓவர்களில் விரைவாக ரன்களை சேர்த்தார். குறிப்பாக இந்தியாவை 300 ரன்கள் தாண்டுவதற்கு உதவிய அவர் 106 மீட்டர் சிக்ஸரை பறக்க விட்டு இந்த உலகக் கோப்பையில் பெரிய சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையும் படைத்தார். இதற்கு முன் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் க்ளன் மேக்ஸ்வெல் 104 மீட்டர் சிக்சர் அடித்ததையும் சாதனையாகும்.

இதையும் படிங்க: ஆசியாவின் கிங்’காக முன்னேறிய விராட் கோலி.. சச்சின், சங்ககாராவின் ரெக்கார்டை உடைத்து புதிய இரட்டை சாதனை

அந்த வகையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் 3 பவுண்டரி 6 சிக்சருடன் 82 (56) ரன்கள் குவித்து இந்தியாவை வலுப்படுத்தி ஆட்டமிழந்தார். இறுதியில் ரவீந்திர ஜடேஜா அதிரடியாக 35 (24) ரன்கள் எடுத்த உதவியுடன் 50 ஓவர்களில் இந்தியா 357/8 ரன்கள் எடுத்தது. மறுபுறம் சற்று ரன்களை வாரி வழங்கிய இலங்கை சார்பில் அதிகபட்சமாக மதுசங்கா வேகப்பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

Advertisement