கொல்கத்தா அணியின் எதிர்கால சொத்தே இவர்தான் – வெற்றிக்கு பின் இளம்வீரரை பாராட்டிய ஷ்ரேயாஸ் ஐயர்

Shreyas-2
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 47-வது லீக் ஆட்டம் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச அதன்படி பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் மட்டுமே குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் சஞ்சு சாம்சன் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

RR vs KKR Sanju Samson Shreyas Iyer

- Advertisement -

பின்னர் 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை எதிர்த்து ஆடிய கொல்கத்தா அணி 19.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 158 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் நிதீஷ் ராணா 48 ரன்களும், ரிங்கு சிங் 42 ரன்களும் அடித்து அசத்தினர்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் : இந்த போட்டியில் பவர் பிளேவின் போது எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி 36 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தனர். அதுமட்டுமின்றி ஒரு விக்கெட் கைப்பற்றி இருந்தனர்.

Rinku Singh

இதுபோன்ற துவக்கம் தான் எங்களுக்கு தேவைப்பட்டது. பயிற்சியில் எப்போதுமே உமேஷ் யாதவ் சிறப்பாக பந்து வீசி வருகிறார். அவரது பந்து வீச்சை வலைப்பயிற்சியில் எதிர்கொள்வது மிகவும் கடினம். அந்த வகையில் இந்த போட்டியிலும் அவர் நிறைய திட்டங்களுடன் சிறப்பாக பந்து வீசினார். சுனில் நரேனை பொருத்தவரை அவரிடம் நாம் எப்போது பந்தை கொடுத்தாலும் விக்கெட்டை எடுத்துக் கொடுக்க தயாராக இருப்பார்.

- Advertisement -

அதே நேரத்தில் மிகவும் சிக்கனமாகவும் ரன்களை விட்டுக் கொடுத்து அசத்தலாக பந்து வீசுவார். ரிங்கு சிங்கின் பேட்டிங்கை பாராட்டியே ஆகவேண்டும். இப்போதுதான் இரண்டாவது அல்லது மூன்றாவது ஆட்டத்தில் விளையாடுகிறார். ஆனால் புது வீரர் போன்று விளையாடாமல் நெருக்கடியை சிறப்பாக சமாளித்து அருமையாக விளையாடினார்.

இதையும் படிங்க : ஐபிஎல் வரலாற்றின் டாப் 5 அதிகபட்ச ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடிகள் – லிஸ்ட் இதோ

நிதீஷ் ராணாவுடன் அவர் அமைத்த பாட்னர்ஷிப் சிறப்பான ஒன்று. நிச்சயம் கொல்கத்தா அணியின் எதிர்கால சொத்தாக ரிங்கு சிங் இருப்பார் என ஷ்ரேயாஸ் ஐயர் அவரைப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement