ஐபிஎல் வரலாற்றின் டாப் 5 அதிகபட்ச ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடிகள் – லிஸ்ட் இதோ

Bairstow
- Advertisement -

ஐபிஎல் என்றவுடன் அதில் எப்போதுமே பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பேட்ஸ்மேன்கள் பறக்கவிட்டு ரன் மழையாக பொழிய வேண்டும் என்றுதான் பெரும்பாலான ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பார்கள். அதிலும் 2 பேட்ஸ்மேன்கள் ஜோடி சேர்ந்து பார்ட்னர்ஷிப் போட்டால் அது அமர்களமாக இருக்கும். அத்துடன் பொதுவாகவே கிரிக்கெட்டில் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் என்பது வெற்றியை தீர்மானிப்பதில் மிகமிக முக்கிய ஒன்றாகும். குறிப்பாக வெற்றிரமாக 200க்கும் போன்ற ரன்களை அடிக்க வேண்டுமானாலும் சேசிங் செய்ய வேண்டுமானாலும் அதற்கு ஓப்பனிங் ஜோடியின் பங்கு இன்றியமையாத ஒன்றாகும்.

ABD

- Advertisement -

அந்த வகையில் எந்த ஒரு போட்டியிலும் ஓப்பனிங் பேட்ஸ்மென்கள் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து விட்டால் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிடும். அந்த அளவுக்கு பவர்ஃபுல்லான ஓபனிங் ஜோடி அதையே 150க்கும் மேல் அதிகப்படுத்தினால் வெற்றி 100% நிச்சயமாகி விடும். அப்படி ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த டாப் 5 ஜோடிகளைப் பற்றி பார்ப்போம்.

5. வாட்சன் – டு பிளேஸிஸ்: கடந்த 2020 ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளால் சென்னை தவிர்த்து வந்த நிலையில் பஞ்சாப் எதிரான ஒரு போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 179 ரன்களை துரத்த சென்னையின் ஷேன் வாட்சன் மற்றும் டுப்லஸ்ஸிஸ் ஆகியோர் களமிறங்கினர். ஆரம்பத்தில் நிதானத்தை கடைப் பிடித்த இந்த ஜோடி நேரம் செல்ல செல்ல பஞ்சாப் பவுலர்களை புரட்டி எடுத்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு வெற்றி உறுதி செய்ததாலும் அவுட்டாகாமல் அடம் பிடித்தனர்.

watson

தொடர்ந்து மிரட்டலான பேட்டிங்கை வெளிப்படுத்திய இவர்களில் டு பிளேஸிஸ் 87* (53) ரன்களும் ஷேன் வாட்சன் 83* (53) ரன்களும் தெறிக்க விட்டு கடைசி வரை அவுட்டாகாமல் போட்டியை 17.4 ஓவர்களிலேயே முடித்து 181/0 ரன்களை எட்ட வைத்து 10 விக்கெட் வித்தியாச மாஸ் வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். அதன் காரணமாக இப்பட்டியலில் 5-வது இடம் பிடித்துள்ள அவர்கள் ஐபிஎல் கிரிக்கெட்டில் சேசிங் செய்யும் போது அதிகபட்ச ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த சென்னை ஜோடி என்ற சாதனையையும் படைத்தனர்.

- Advertisement -

4. ருதுராஜ் – கான்வே: இந்த வருட ஐபிஎல் தொடரில் ஹைதெராபாத்துக்கு எதிராக நடந்த மே 1-ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னைக்கு ஜோடி சேர்ந்த ருதுராஜ் – டேவோன் கான்வே முதல் ஓவரிலிருந்தே அதிரடியான பேட்டிங்கை கையாண்டனர். அதிலும் நடராஜன், உம்ரான் மாலிக் போன்ற இதர அணிகளை காட்டிலும் தரமான பவுலர்களை கொண்ட ஹைதராபாத்தை புரட்டி எடுத்த அந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 182 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த போது ருதுராஜ் துரதிஸ்டவசமாக 99 ரன்களில் ஆட்டமிழக்க அவருடன் ஜோடியாக விளையாடிய கான்வே 85* ரன்கள் விளாசியதால் 20 ஓவர்களில் சென்னை 202/2 ரன்கள் எடுத்தது.

Ruturaj Gaikwad - Devon Conway CSK vs SRH

அதை துரத்திய ஹைதராபாத் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற நிலையில் 182 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ருதுராஜ் – கான்வே ஜோடி இந்த பட்டியலில் 4-வது இடம் பிடிக்கிறது. அதைவிட ஐபிஎல் வரலாற்றில் ஹைதராபாத்துக்கு எதிராக அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி மற்றும் சென்னைக்காக அதிக பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற இரட்டை சாதனைகளையும் அவர்கள் படைத்தனர்.

- Advertisement -

3. ராகுல் – அகர்வால்: பெங்களூருவின் சிறுவயது நண்பர்களான மயங்க் அகர்வால் – கேஎல் ராகுல் கடந்த 2020 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக ஒன்றாக விளையாடியபோது ராஜஸ்தானுக்கு எதிராக ஷார்ஜாவில் நடந்த போட்டியில் ஓப்பனிங் ஜோடியாக களமிறங்கி அந்த அணி பவுலர்களை பிரித்து மேய்ந்து ரன் மழை பொழிந்தனர். அதில் கேஎல் ராகுல் 69 (54) ரன்களுடன் கம்பெனி கொடுக்கும் வகையில் விளையாட மறுபுறம் ராஜஸ்தானை தெறிக்கவிட்ட மயங்க் அகர்வால் 106 (50) ரன்கள் விளாசி சதமடித்து முதல் விக்கெட்டுக்கு 183 ரன்கள் மாஸ் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

Agarwal

அதனால் 224 என்ற மிகப்பெரிய ரன்களை இலக்காக நிர்ணயித்த போதிலும் அதை 19.3 ஓவர்களில் 226/6 ரன்களை எடுத்து எட்டிப்பிடித்த ராஜஸ்தான் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ரன்களை சேசிங் செய்த அணி என்ற சாதனை படைத்தது. பஞ்சாப் பவுலர்கள் வெற்றியை கோட்டைவிட்டாலும் கூட அன்றைய நாளில் சிறப்பாக பதிவு செய்த ராகுல் அகர்வால் ஜோடி இபட்டியலில் 3-வது இடம் பிடிக்கிறது.

- Advertisement -

2. கம்பீர் – லின்: கடந்த 2017 ஐபிஎல் தொடரில் பிரத்தியேகமாக விளையாடிய சுரேஷ் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் கொல்கத்தாவுக்கு எதிரான ஒரு போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 183/4 ரன்கள் சேர்த்தது. ஆனால் அதை துரத்திய கொல்கத்தாவுக்கு ஓப்பனிங்கில் கேப்டன் கௌதம் கம்பீருடன் ஜோடி சேர்ந்த ஆஸ்திரேலியாவின் கிறிஸ் லின் ஒவ்வொரு ஓவரிலும் மிரட்டலான பவுண்டரிகளை பறக்கவிட்டார்.

Gambhir Chris Lynn Gujarat Lions

அவருக்கு ஈடாக கம்பீரும் குஜராத் பவுலர்களை பந்தாட 14.5 ஓவர்களிலேயே 184/0 ரன்கள் எடுத்த கொல்கத்தா 10 விக்கெட் வித்தியாசத்தில் மாஸ் வெற்றி பெற்றது. அன்றைய நாளில் தங்களது பேட்டிங்கில் அனலை பறக்கவிட்ட கம்பீர் 76* (48) ரன்களும் கிறிஸ் லின் 93* (41) சேர்த்து குஜராத்தை வதம் செய்து இந்த பட்டியலில் 2-வது இடம் பிடிக்கின்றனர்.

1. வார்னர் – பேர்ஸ்டோ: 2019 ஐபிஎல் தொடரின் ஒரு போட்டியில் வசமாக சிக்கிய பெங்களூருவை வெச்சு செய்யும் வகையில் ஹைதெராபாத் அணிக்காக ஓப்பனிங்கில் களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோ மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் கொஞ்சம் கூட கருணை காட்டாமல் கதறகதற பெங்களூரு பவுலர்களை அடித்து துவைத்தனர். அன்றைய நாளில் இருவருமே அரைசதம் கடந்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டும் திருப்தி அடையாத அளவுக்கு பந்துவீச்சில் வாரி வாரி வழங்கிய பெங்களூர் பவுலர்களை பிரித்து மேய்ந்த இந்த ஜோடி 17-வது ஓவரில் ஒருவழியாக 185 ரன்கள் முரட்டுத்தனமான பார்ட்னர்ஷிப் அமைத்தபின் பிரிந்தது.

bairstow

அதில் பேர்ஸ்டோ 114 (56) ரன்களில் ஆட்டமிழந்தாலும் கடைசி வரை அவுட்டாகாமல் மிரட்டிய வார்னர் சதமடித்து 100* (55) ரன்கள் விளாசியதால் 20 ஓவர்களில் ஹைதெராபாத் 231/2 ரன்கள் எடுத்தது. அதை துரத்திய பெங்களூரு வெறும் 113 ரன்களுக்கு பெட்டிப்பாம்பாக அடங்கியதால் 118 ரன்கள் வித்யாச பெரிய வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய வார்னர் – பேர்ஸ்டோ ஜோடி ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடியாக வரலாறு படைத்தது.

Advertisement