வித்யாச சைகையுடன் பென் ஸ்டோக்ஸ் அவுட்டாக்கி.. வெறித்தனமாக கொண்டாடிய ஸ்ரேயாஸ் ஐயர்.. பின்னணி என்ன?

Shreyas Iyer vs Ben Stokes
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக ஹைதராபாத் நகரில் நடந்த முதல் போட்டியில் 28 ரன்கள் வித்யாசத்தில் தோற்ற இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்தது. இருப்பினும் விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் சுதாரிப்புடன் செயல்பட்ட இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்து 1 – 1* என்ற கணக்கில் தொடரை சமன் செய்து அசத்தியுள்ளது.

முன்னதாக இந்த தொடரில் பேட்டிங் துறையில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சுமாராக விளையாடியதால் கடுமையான விமர்சனங்களை சந்தித்தனர். அதில் 2வது போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சதமடித்து 104 ரன்கள் குவித்த சுப்மன் கில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றி ஃபார்முக்கு திரும்பி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

- Advertisement -

வெறித்தனமான கொண்டாட்டம்:
இருப்பினும் முதல் போட்டியில் சுமாராக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்சில் 27 ரன்களில் அவுட்டானார். அதனால் இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் பேட்டிங் செய்த அவர் கில்லுடன் சேர்ந்து 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 29 ரன்கள் அடித்து நல்ல துவக்கத்தை பெற்றார்.

ஆனால் அப்போது டாம் ஹார்ட்லி வீசிய ஒரு பந்தை பவுண்டரி அடிக்க முயற்சித்த அவர் தூக்கி அடித்தார். இருப்பினும் சரியாக அடித்ததால் கேட்ச்சாக மாறிய அந்த பந்தை உள்வட்டத்திற்குள் இருந்து 20 – 30 மீட்டர்கள் வேகமாக ஓடிய பென் ஸ்டோக்ஸ் அபாரமாக பிடித்து அவுட்டாக்கினார். அப்போது கேட்ச் பிடித்த மகிழ்ச்சியில் வேகமாக ஓடிய அவர் தன்னுடைய சுட்டு விரலை மடக்கியவாறு வித்தியாசமாக கொண்டாடி ஸ்ரேயாஸ் ஐயரை வெறுப்பேற்றும் வகையில் வழியனுப்பி வைத்தார்.

- Advertisement -

அதை தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் 399 ரன்களை இங்கிலாந்து துரத்தும் போது 194/5 என்ற இக்கட்டான நிலைமையில் களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் நிதானமாக விளையாடி காப்பாற்ற முயற்சித்தார். இருப்பினும் அப்போது அஸ்வின் வீசிய 53வது ஓவரின் ஒரு பந்தை எதிர்கொண்ட பென் ஃபோக்ஸ் வேகமாக சிங்கிள் எடுக்க ஓடினார். அப்போது பதிலுக்கு எதிர்ப்புறமிருந்து ஓடிய பென் ஸ்டோக்ஸ் ஸ்டோக்ஸ் எளிதாக சிங்கிள் எடுத்து விடலாம் என்ற எண்ணத்துடன் சற்று மெத்தனமாக ஓடினார்.

இதையும் படிங்க: இப்படி இருந்தா சாதிக்க முடியாது.. அஸ்வின் 499 விக்கெட்டில் நிற்க காரணம் அது தான்.. பீட்டர்சன் அதிருப்தி

மறுபுறம் ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் பந்தை வேகமாக எடுத்து நேரடியாக ஸ்டம்ப் மீது அடித்து அவரை நூலிலையில் ரன் அவுட்டாக்கினார். அந்த வகையில் அபாரமான ரன் அவுட் செய்த ஸ்ரேயாஸ் ஐயர் தம்மை அவுட்டாக்கியது போது எப்படி வெறுப்பேற்றும் வகையில் சுட்டு விரலை மடக்கி கொண்டாடினாரோ அதே போல வெறித்தனமாக கொண்டாடி பென் ஸ்டோக்ஸை வழியனுப்பி வைத்து பதிலடி கொடுத்தார்.

Advertisement