இப்படி இருந்தா சாதிக்க முடியாது.. அஸ்வின் 499 விக்கெட்டில் நிற்க காரணம் அது தான்.. பீட்டர்சன் அதிருப்தி

Kevin Pieterson 2
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பான துவக்கத்தை பெற்றுள்ளது என்று சொல்லலாம். ஏனெனில் ஹைதராபாத் நகரில் நடைபெற்ற இத்தொடரின் முதல் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதற்கு விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்த இந்தியா தொடரை 1 – 1* என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

முன்னதாக இந்த தொடரில் நட்சத்திர சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் போட்டியில் 6 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இருப்பினும் இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்சில் விக்கெட்டுகள் எடுக்காமல் தடுமாறிய அவர் 2வது இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார்.

- Advertisement -

சேஸ் பண்ணாதீங்க:
ஆனாலும் 2வது போட்டியில் இன்னும் ஒரு விக்கெட்டை எக்ஸ்ட்ராவாக எடுத்திருந்தால் இந்நேரம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் எடுத்த இரண்டாவது இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்திருப்பார். இருப்பினும் அதிர்ஷ்டம் கை கொடுக்காததால் இதுவரை 97 போட்டிகளில் 499* விக்கெட்டுகள் எடுத்துள்ள அவர் அந்த சாதனையை படைக்க அடுத்த போட்டி வரை காத்திருக்க வேண்டியுள்ளது.

இந்நிலையில் 500 விக்கெட்டுகள் என்ற சாதனையை இத்தொடரில் அஸ்வின் சேசிங் செய்வதாக முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். அதனாலயே இப்போட்டியில் அதை தொட முடியாமல் 499 விக்கெட்டுக்களுடன் அஸ்வின் நிற்பதாகவும் பீட்டர்சன் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

எனவே சாதனைக்காக விளையாடாமல் அணிக்காக தொடர்ந்து சிறப்பாக விளையாட முயற்சித்தால் அஸ்வினை தேடி 500 விக்கெட்டுகள் வரும் என்று மறைமுகமாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அஸ்வின் சாதனையை சேசிங் செய்கிறார். அதனாலேயே அவர் சிறப்பாக பந்து வீச முடியாமல் தடுமாறுகிறார். ரவுண்டு தி விக்கெட் திசையில் அகலமாக வந்து வீசினால் அவர் அதிக அச்சுறுத்தலை கொடுப்பார் என்று நான் நினைத்தேன்”

இதையும் படிங்க: பஸ்பாலுக்கு விழுந்த முதல் அடி.. வெற்றி நடையை நிறுத்தி பாகிஸ்தான் இல்ல.. என்பதை நிரூபித்த இந்தியா

“ஆனால் அவர் ஓவர் தி விக்கெட்டில் அதிகமாக வலது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக வீசினார். அவர் பவுலிங்கை மாற்றி மாற்றி செயல்பட முயற்சித்தார். அபாரமான பவுலரான அவர் சில விக்கெட்டுகளை எடுத்தார். இருப்பினும் உங்களுடைய செயல்பாடுகள் தனி நபருக்காக அல்லாமல் அணிக்காக இருக்க வேண்டும். ஒருவேளை இன்னும் ஒரு விக்கெட்டை எடுத்த பின் அவர் ரிலாக்ஸாக பந்து வீசுவதை நீங்கள் பார்க்கலாம்” என்று கூறினார்.

Advertisement