பஸ்பாலுக்கு விழுந்த முதல் அடி.. வெற்றி நடையை நிறுத்தி பாகிஸ்தான் இல்ல.. என்பதை நிரூபித்த இந்தியா

Ben Stokes ENG
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று முடிந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதனால் முதல் போட்டியில் தோல்வியை கொடுத்த இங்கிலாந்துக்கு இப்போட்டியில் பதிலடி கொடுத்துள்ள இந்திய அணி 1 – 1* என்ற கணக்கில் இத்தொடரை சமன் செய்துள்ளது. முன்னதாக பென் ஸ்டோக்ஸ் புதிய கேப்டனாக பொறுப்பேற்றது முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக பேட்டிங் செய்யும் யுக்தியை இங்கிலாந்து பின்பற்றி வருகிறது.

குறிப்பாக பஸ்பால் என்ற பெயருடன் கடந்த 2 வருடங்களாக ஏராளமான வெற்றிகளை குவித்து வரும் அந்த அணி இம்முறை 12 வருடங்கள் கழித்து இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்து வெல்வோம் என்று ஆரம்பத்திலேயே எச்சரித்தது. குறிப்பாக 2022 நவம்பர் மாதம் பாகிஸ்தானை அதனுடைய சொந்த மண்ணில் 3 – 0 என்ற கணக்கில் தோற்கடித்ததை போல் இம்முறை இந்தியாவிலும் வெல்வோம் என்று ஜேம்ஸ் ஆண்டர்சன், மார்க் வுட் போன்ற இங்கிலாந்து வீரர்கள் தெரிவித்திருந்தனர்.

- Advertisement -

பஸ்பாலுக்கு முதல் அடி:
அந்த நிலையில் நடைபெற்ற இத்தொடரின் முதல் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்த இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று அசத்தியது. அதனால் அடுத்து வரும் போட்டிகளிலும் இந்தியாவை தோற்கடித்து 4 – 1 என்ற கணக்கில் இங்கிலாந்து வெல்லும் என்று முன்னாள் வீரர் மாண்டி பனேசர் தெரிவித்திருந்தார்.

ஆனால் 2வது போட்டியில் ஜெய்ஸ்வால் முதல் இன்னிங்ஸில் இரட்டை சதமடித்து தனி ஒருவனாக 209 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு கை கொடுத்தார். அதே போல இரண்டாவது சுமாரான ஃபார்மில் தடுமாறி வரும் சுப்மன் கில் சதமடித்து 104 ரன்கள் குவித்து இக்கட்டான நேரத்தில் இந்தியாவை மீட்டெடுத்தார்.

- Advertisement -

அதை வீணடிக்காமல் பந்து வீச்சில் பும்ரா, அஸ்வின், குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல் ஆகியோர் தேவையான விக்கெட்டுகளை எடுத்து இங்கிலாந்தை தோற்கடித்தனர். இதன் காரணமாக பென் ஸ்டோக்ஸ் தலைமையில் முதல் முறையாக ஆசிய கண்டத்தில் ஒரு டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தோல்வியை பதிவு செய்துள்ளது. இதற்கு முன் ஆசிய கண்டத்தில் ஸ்டோக்ஸ் தலைமையில் பாகிஸ்தான் மண்ணில் 3 போட்டிகளில் 3 தொடர்ச்சியான வெற்றிகளை இங்கிலாந்து பெற்றிருந்தது.

இதையும் படிங்க: டெக்னாலஜி சரில்ல.. இந்தியாவுக்காக சாதகமாக மாறிய டிஆர்எஸ் பற்றி.. பென் ஸ்டோக்ஸ் விமர்சனம்

அதை தொடர்ந்து இத்தொடரின் முதல் போட்டியிலும் வென்ற இங்கிலாந்து ஆசிய கண்டத்தில் 4 வெற்றிகளுக்கு பின் முதல் முறையாக தோல்வியை சந்தித்துள்ளது. அந்த வகையில் ஆசிய கண்டத்தில் இங்கிலாந்தின் பஸ்பால் அணுகுமுறைக்கு முதல் முறையாக அடியை கொடுத்துள்ள இந்திய அணி நாங்கள் பாகிஸ்தான் அணி அல்ல என்பதை நிரூபித்துள்ளது என்றால் மிகையாகாது.

Advertisement