டெக்னாலஜி சரில்ல.. இந்தியாவுக்காக சாதகமாக மாறிய டிஆர்எஸ் பற்றி.. பென் ஸ்டோக்ஸ் விமர்சனம்

Ben Stokes DRS
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து முதல் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இருப்பினும் விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் சுதாரித்து விளையாடிய இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1 – 1* என்ற கணக்கில் தொடரை சமன் செய்து இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்துள்ளது.

முன்னதாக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியா நிர்ணயித்த 399 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு ஜோ ரூட் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் அனைவரும் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டமிழந்தனர். ஆனால் துவக்க வீரர் ஜாக் கிராவ்லி 73 ரன்கள் அடித்து இந்தியாவுக்கு சவாலை கொடுத்து வெற்றிக்கு போராடினார்.

- Advertisement -

டெக்னாலஜி தப்பு:
அப்போது குல்தீப் யாதவ் வீசிய 42வது ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட அவர் தவறாக கணித்து அடிக்காமல் விட்டார். அந்த நேரத்தில் பந்து அவருடைய காலில் பட்டதால் இந்திய அணியினர் எல்பிடபுள்யூ கேட்ட போதிலும் களத்தில் இருந்த நடுவர் அவுட் கொடுக்கவில்லை. அதனால் இந்திய அணியினர் ரிவ்யூ கேட்டதை தொடர்ந்து மூன்றாவது நடுவர் சோதித்தார்.

அதை சோதித்த போது முதல் பார்வையில் பந்து வெளியே நகர்ந்து லெக் ஸ்டம்ப்பில் படாதது போல் நன்றாக தெரிந்தது. ஆனால் பால் டிராக்கிங் முறையில் சோதிக்கப்பட்ட போது பந்து லெக் ஸ்டம்ப்பில் 50% மேல் அடித்தது தெளிவாகத் தெரிந்ததால் மூன்றாவது நடுவர் தீர்ப்பை மாற்றி அவுட் என்று வழங்கினார். அந்த தீர்ப்பு இங்கிலாந்து அணிக்கு பாதகமாகவும் இந்தியாவுக்கு சாதகமாகவும் அமைந்து வெற்றியில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

இந்நிலையில் அந்த தீர்ப்பில் டெக்னாலஜி தவறாக இருந்ததாக இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விமர்சித்துள்ளார். இது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “விளையாட்டில் டெக்னாலஜி இருக்கிறது. இருப்பினும் அது 100% சரியாக இருக்காது என்பதை அனைவரும் புரிந்துள்ளார்கள். அதனாலேயே அதில் அம்பயர்ஸ் கால் இருக்கிறது”

இதையும் படிங்க: வெற்றிக்காக ரோஹித் சர்மா போட்ட திட்டம்.. பாழாய் போன அஷ்வினின் வரலாற்று சாதனை – நடந்தது என்ன?

“அது அனைவரும் சொல்வது போல் 100% சரியாக இல்லாத போது சில நேரங்களில் டெக்னாலஜி அந்த இடத்தில் தவறாக வேலை செய்துள்ளது என்று ஒருவர் சொல்வதில் நியாயமில்லை என்று நான் நினைக்க மாட்டேன். இது என்னுடைய சொந்த கருத்தாகும். நீங்கள் நடந்து முடிந்தவற்றில் எதையும் செய்ய முடியாது. முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதை நீங்கள் மாற்ற முடியாது. நானும் அங்கே தான் இருக்கிறேன்” என்று கூறினார்.

Advertisement