வெற்றிக்காக ரோஹித் சர்மா போட்ட திட்டம்.. பாழாய் போன அஷ்வினின் வரலாற்று சாதனை – நடந்தது என்ன?

Ashwin
- Advertisement -

தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த 2011-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 96 போட்டிகளில் பங்கேற்று 496 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அதனை தொடர்ந்து தற்போது நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் பங்கேற்றதன் மூலம் தனது 97-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய அவர் மேலும் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை படைப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் நடைபெற்று முடிந்த இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் விக்கெட்டுகளை வீழ்த்த தவறிய அஸ்வின் இரண்டாவது இன்னிங்சில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே எடுத்ததால் தற்போது 499 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

- Advertisement -

எனவே அவர் தனது 500-ஆவர் விக்கெட்டை வீழ்த்த இன்னும் 10 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் பிப்ரவரி 15-ஆம் தேதியே துவங்குவதால் அவர் இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்துவதற்கான தருணம் தாமதம் ஆகியுள்ளது.

இருப்பினும் இந்த இரண்டாவது போட்டியிலேயே அஸ்வின் 500 விக்கெட்டை எடுத்திருக்க வாய்ப்பு இருந்தும் அது ரோகித் சர்மாவால் கைகூடாமல் போன சம்பவமும் இந்த போட்டியில் நடைபெற்றது. அந்த வகையில் 399 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்கினை நோக்கி இங்கிலாந்து அணி பேட்டிங்கை துவங்கிய போது இந்திய அணி மிகச் சிறப்பாக பந்துவீசி அசத்தியது.

- Advertisement -

அதிலும் குறிப்பாக அஸ்வின் சிறப்பாக பந்து வீசி மூன்று விக்கெட்டுகளை எடுத்திருந்த வேளையில் இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 8 விக்கெட்டுகளை இழந்திருந்த போது அஸ்வின் பந்துவீசி இருந்தால் நிச்சயம் எஞ்சியுள்ள இரண்டு விக்கெட்டில் யாராவது ஒருவரை வீழ்த்தி அவரால் 500-ஆவது விக்கெட்டை எடுத்திருக்க முடியும்.

இதையும் படிங்க : செஞ்சுரி அடிச்சும் எங்கப்பா எனக்கு போன் போட்டு திட்டுனாரு.. சுவாரசிய சம்பவத்தை பகிர்ந்த – சுப்மன் கில் பேட்டி

ஆனால் இந்திய அணி விரைவாக வெற்றிபெற வேண்டும் என நினைத்த ரோகித் சர்மா இறுதி கட்டத்தில் தொடர்ந்து வேகப்பந்து வீச்சாளர்களான பும்ரா மற்றும் முகேஷ் குமார் ஆகியோரையே பயன்படுத்தினார். இதன் காரணமாக கடைசி நேரத்தில் அஷ்வினால் பந்துவீச முடியாமல் போனது. அதனால் அவரது இந்த வரலாற்று சாதனையும் தாமதமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement