செஞ்சுரி அடிச்சும் எங்கப்பா எனக்கு போன் போட்டு திட்டுனாரு.. சுவாரசிய சம்பவத்தை பகிர்ந்த – சுப்மன் கில் பேட்டி

Gill
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 106 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்து இந்த தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்தது. இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்சின் போது முக்கியமான நேரத்தில் இளம் வீரரான சுப்மன் கில் அடித்த சதம் இந்திய அணியின் பெரிய ரன் குவிப்பிற்கு உதவியோடு சேர்த்து வெற்றிக்கு காரணமாகவும் அமைந்தது.

ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த சில ஆண்டுகளாக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை தொடர்ச்சியாக தடுமாற்றமான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி வந்தார். அதிலும் குறிப்பாக துவக்க வீரருக்கான இடத்திலிருந்து மூன்றாவது வீரராக தனது இடத்தை மாற்றிக் களமிறங்கியதில் இருந்து தொடர்ச்சியாகவே அவரது ஆட்டம் சற்று மோசமான நிலையிலேயே இருந்தது.

- Advertisement -

அதிலும் குறிப்பாக கடந்த 12-இன்னிங்ஸ்களாக அரைசதம் கூட அடிக்காத சுப்மன் கில் தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்து மீண்டும் ஃபார்மிற்கு திரும்பி உள்ளது ரசிகர்களையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. இந்நிலையில் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிந்து தான் அடித்த சதம் குறித்து பேசிய இந்திய வீரர் சுப்மன் கில் கூறுகையில் : நான் முதல் இன்னிங்சின் போது ஃபீல்டிங் செய்கையில் குல்தீப் யாதவ் ஓவரில் ஒரு கேட்ச் பிடித்தேன். அப்போது பந்து என் கைகளில் தாக்கி ரத்தம் வந்தது, இதனால் கொஞ்சம் வலியும் இருந்தது.

எனவே இரண்டாவது இன்னிங்ஸ்க்கு பேட்டிங் செய்ய களமிறங்க முன்னர் வலி நிவாரண ஊசியை போட்டுக் கொண்டுதான் பேட்டிங் செய்யவே வந்தேன். கடந்த சில இன்னிங்ஸ்களாகவே நான் சரியாக விளையாடவில்லை என்பது எனக்கு தெரியும். எனவே எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்திக் கொள்ள விரும்பினேன். அதோடு நெருக்கடி இருந்தாலும் நான் எதைப் பற்றியும் யோசிக்காமல் என்னுடைய ஆட்டத்தை இயல்பாக களத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்றே விளையாடினேன்.

- Advertisement -

அதோடு போட்டியில் நான் பிடித்த முதல் பந்தில் இருந்து ஆட்டமிழந்த கடைசி பந்து வரை எந்த ஒரு மாற்றத்தையும் செய்யாமல் என்னுடைய பலத்தை நம்பி விளையாடினேன். இருப்பினும் நான் 104 ரன்களில் ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பியதும் எனது தந்தை எனக்கு போன் செய்து திட்டினார். ஒரு பெரிய சதத்தை அடிக்காமல் எதற்காக 104 ரன்கள் ஆட்டமிழந்து விட்டாய் என்று அதட்டினார்.

இதையும் படிங்க : 600 ரன்களா இருந்தாலும் அடிப்போம்.. இங்கிலாந்து வாயில் சொன்னதை.. 4 பந்து மீதம் வைத்து செயலில் முடித்த இந்தியா

நானும் தவற விட்டுட்டேன்.. நீங்கள் சொல்வது உண்மைதான் என்று கூறினேன்.. அதன் பின்னரே எனது தந்தை சமாதானம் அடைந்தார் என்று சுப்மன் கில் தெரிவித்தார். மேலும் தன் மீதான விமர்சனங்களை குறித்து பேசிய அவர் கூறுகையில் : நான் எப்பொழுதுமே சிறப்பாக ஆடவில்லை என்றால் பேப்பரையோ, சமூக வலைதளத்தையோ பார்க்க மாட்டேன். ஏனெனில் நான் சிறப்பாக விளையாடவில்லை என்று எனக்கே தெரியும். அதனை மற்றவர்கள் சொல்லித்தான் தெரிய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்திருந்தார்.

Advertisement