600 ரன்களா இருந்தாலும் அடிப்போம்.. இங்கிலாந்து வாயில் சொன்னதை.. 4 பந்து மீதம் வைத்து செயலில் முடித்த இந்தியா

IND vs ENG VIzag
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இருப்பினும் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இங்கிலாந்துக்கு தக்க பதிலடி கொடுத்து 1 – 1* என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது.

அந்த வகையில் சொந்த மண்ணில் அவ்வளவு எளிதில் வீழ்ந்து விடமாட்டோம் என்பதை நிரூபித்துள்ள இந்தியா கம்பேக் கொடுத்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. முன்னதாக பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடும் அணுகு முறையை பயன்படுத்தி சமீப காலங்களாக இங்கிலாந்து தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று வருகிறது.

- Advertisement -

4 பந்துகள் மீதம்:
அந்த சூழ்நிலையில் இத்தொடரில் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்துவோம் என்று எச்சரித்த இங்கிலாந்து முதல் போட்டியில் அதை செய்து காட்டி பாராட்டுகளைப் பெற்றது. அதே போல இரண்டாவது போட்டியில் இந்தியா நிர்ணயித்த 399 என்ற மிகப்பெரிய இலக்கை சேசிங் செய்து வென்று காட்டுவோம் என்று நேற்று இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்திருந்தார்.

குறிப்பாக 600 ரன்கள் இலக்காக இருந்தாலும் அதை நம்மால் சேசிங் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை பயிற்சியாளர் ப்ரெண்டன் மெக்கல்லம் கொடுத்ததாக 3வது நாள் ஆட்டத்தின் முடிவில் ஆண்டர்சன் கூறியிருந்தார். அத்துடன் 180 ஓவர்கள் மீதம் இருந்தாலும் இந்தியா நிர்ணயித்த 399 ரன்கள் இலக்கை நாங்கள் 60 முதல் 70 ஓவர்களுக்குள் அடித்து முடிப்போம் என்றும் ஆண்டர்சன் தைரியமாக தெரிவித்திருந்தார்.

- Advertisement -

அந்த நிலையில் நடைபெற்ற நான்காவது நாள் ஆட்டத்தில் 67/1 என்ற ஸ்கோருடன் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்தை தரமாக பந்து வீசி அதிரடியாக விளையாட முடியாமல் மடக்கிப்பிடித்த இந்தியா 69.2 ஓவரில் ஆல் அவுட்டாக்கியது. அந்த வகையில் 600 ரன்களாக இருந்தாலும் அடிப்போம் என்று சொன்ன இங்கிலாந்து கடைசியில் தோல்வியை சந்தித்தது.

இதையும் படிங்க: ரோஹித் அதிருப்தி.. அஸ்வினின் சாதனை 500வது விக்கெட்டை தடுத்த 3வது அம்பயர்.. நடந்தது என்ன?

மறுபுறம் 70 ஓவருக்குள் சேசிங் செய்து முடிப்போம் என்று சவால் விட்ட இங்கிலாந்தின் ஆட்டத்தை 69.2 ஓவரில் முடித்த இந்திய அணி 4 பந்துகள் மீதம் வைத்து அபார வெற்றி பெற்றது. மொத்தத்தில் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து வாயில் சொன்னதை இந்திய அணி செயலில் செய்து காண்பித்துள்ளது என்றே சொல்லலாம். அத்துடன் முதல் போட்டியில் அசந்த நேரம் பார்த்து அடித்த இங்கிலாந்தை இரண்டாவது போட்டியில் சுதாரிப்புடன் செயல்பட்டு வீழ்த்திய இந்தியா வெற்றி பாதைக்கும் திரும்பியுள்ளது.

Advertisement