ரோஹித் அதிருப்தி.. அஸ்வினின் சாதனை 500வது விக்கெட்டை தடுத்த 3வது அம்பயர்.. நடந்தது என்ன?

Ashwin and Rohit
- Advertisement -

விசாகப்பட்டினத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நிறைவு பெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. இருப்பினும் இரண்டாவது போட்டியில் சுதாரித்து விளையாடிய இந்தியா பெரிய வெற்றியை பெற்று 1 – 1* (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது.

இந்த வெற்றிக்கு ஜெய்ஸ்வால் 209, கில் 104 ரன்கள் அடித்திருந்தாலும் மொத்தமாக 9 விக்கெட்டுகள் எடுத்து 2 இன்னிங்சிலும் தாக்கத்தை ஏற்படுத்திய பும்ரா ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். அதே போல ரவிச்சந்திரன் அஸ்வின் இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் விக்கெட் எடுக்கவில்லை என்றாலும் இரண்டாவது இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகள் எடுத்து வெற்றியில் பங்காற்றினார்.

- Advertisement -

தவறிய 500:
முன்னதாக இப்போட்டியில் 2வது இன்னிங்ஸில் கடைசி நேரத்தில் பேட்டிங் செய்த இங்கிலாந்தின் டெயில் எண்டர் டாம் ஹார்ட்லி நிதானமாக விளையாடி இந்தியாவின் வெற்றிக்கு குறுக்கே தொல்லையாக நின்றார். அப்போது அஸ்வின் வீசிய ஒரு பந்தை அவர் ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயற்சித்தார். அது அவருடைய கைகளில் பட்டு கேட்ச்சாக மாறியது. அதை லெக் ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டிருந்த இந்திய வீரர் சரியாக பிடித்ததால் களத்தில் இருந்த நடுவரும் அவுட் கொடுத்தார்.

ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத டாம் ஹார்ட்லி ரிவ்யூ எடுத்தார். அதை 3வது நடுவர் சோதித்த போது பந்து டாம் ஹார்ட்லியின் கைகளில் பட்டு பவுன்ஸாகி கேட்ச்சாக மாறியது தெரிய வந்தது. அதனால் அவருடைய பேட் அல்லது கையுறையில் பந்து பட்டதா? என்பதை தெரிந்து கொள்வதற்காக நடுவர் ஸ்னிக்கோ மீட்டரை பயன்படுத்தினார். அதில் எட்ஜ் படாதது தெளிவாக தெரிந்தது. இறுதியாக எல்பிடபுள்யூ செய்யப்பட்டுள்ளதா என்பதையும் நடுவர் சோதித்தார்.

- Advertisement -

அதில் பந்து ஸ்டம்ப் மீது உரசியது தெரிந்தும் களத்தில் இருந்த கொடுத்த தீர்ப்பை மூன்றாவது நடுவர் மாற்றி நாட் அவுட் என்று அறிவித்தது ரோஹிர் சர்மா தலைமையிலான இந்திய அணியினரை அதிருப்தியில் ஆழ்த்தியது. இதற்கான காரணம் என்னவெனில் களத்தில் இருந்த நடுவர் முதலில் கேட்ச்சுக்காக மட்டுமே சாஃப்ட் சிக்னலை அவுட்டென கொடுத்தார். எல்பிடபுள்யூ முறைக்கு நாக் அவுட் சிக்னலை கொடுத்திருந்தார்.

இதையும் படிங்க: நாங்க ஜெயிச்சிருந்தாலும் ஒரு குறை இருக்கிறது.. போட்டி முடிந்து இளம் வீரர்கள் குறித்து பேசிய – ரோஹித் சர்மா கருத்து

ஒருவேளை எல்பிடபுள்யூ முறைக்கும் அவர் சாஃப்ட் சிக்னலை அவுட் என்று கொடுத்திருந்தால் பந்து டாம் ஹார்ட்லி கையில் பட்டு பால் ட்ரேக்கிங் தொழில்நுட்பத்தில் ஸ்டம்ப் மீது உரசியத்திற்கு மூன்றாவது நடுவரும் அவுட் கொடுத்திருப்பார். அந்த வகையில் கைக்கு கிடைத்த 4வது விக்கெட் வாய்க்கு கிடைக்காததால் அஸ்வின் இந்த போட்டியிலேயே 500 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைக்கும் வாய்ப்பை இழந்து அடுத்த போட்டிக்காக காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement