நாங்க ஜெயிச்சிருந்தாலும் ஒரு குறை இருக்கிறது.. போட்டி முடிந்து இளம் வீரர்கள் குறித்து பேசிய – ரோஹித் சர்மா கருத்து

Rohit-Sharma
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முடிந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 106 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பழி தீர்த்துக் கொண்டது. இதன் மூலம் இந்திய அணி இந்த தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது முதல் இன்னிங்சில் துவக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 209 ரன்களையும், இரண்டாவது இன்னிங்சில் சுப்மன் கில் 104 ரன்களையும் குவித்தனர். அவர்களை தவிர்த்து இந்திய அணியின் மிடில் ஆர்டர் வரிசையில் எந்த ஒரு வீரரும் பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை.

- Advertisement -

இந்த விடயத்தை போட்டி முடிந்து சுட்டிக்காட்டிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இளம் வீரர்கள் குறித்து சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில் : இந்த போட்டியில் நான் எதையாவது குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் எங்களது அணியின் பேட்ஸ்மேன்கள் நல்ல துவக்கம் பெற்றும் பெரிய ஸ்கோரை அடிக்க முடியாமல் கஷ்டப்பட்டனர்.

இருந்தாலும் என்னால் அவர்களை புரிந்து கொள்ள முடிகிறது. ஏனெனில் அவர்கள் அனைவருமே டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு புதிதாக வந்தவர்கள். அதோடு இளம் வீரர்கள் என்பதால் அவர்களுக்கு இன்னும் நம் வாய்ப்புகளை கொடுத்து நம்பிக்கை கொடுக்க வேண்டும்.

- Advertisement -

அந்த வகையில் நாம் அவர்களுக்கு வாய்ப்புகளும், நம்பிக்கையும் கொடுத்தால் அவர்களால் சிறிய ரன்களை அடிக்க முடியும். அதோடு இந்த போட்டியில் ஒரு குழுவாக இந்த இளம் அணி சிறப்பாக செயல்பட்டதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். ஏனெனில் இங்கிலாந்து போன்ற அணியை இந்த இளம் வீரர்களை கொண்ட அணியை வைத்து வீழ்த்தியதில் மிகவும் மகிழ்ச்சி.

இதையும் படிங்க : எங்க டீமோட சாம்பியன் பிளேயர் இவருதான்.. 2 ஆவது டெஸ்ட் போட்டியின் வெற்றிக்கு பின்னர் – ரோஹித் சர்மா பேட்டி

கடந்த இரண்டு ஆண்டுகளாக இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்த தொடர் எங்களுக்கு எளிதான ஒன்று கிடையாது. இன்னும் மூன்று போட்டிகள் எதிர்வர காத்திருக்கின்றன. அந்த போட்டிகளிலும் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement