எங்க டீமோட சாம்பியன் பிளேயர் இவருதான்.. 2 ஆவது டெஸ்ட் போட்டியின் வெற்றிக்கு பின்னர் – ரோஹித் சர்மா பேட்டி

Rohit
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி துவங்கி போட்டியின் நான்காம் நாளான இன்று பிப்ரவரி 5-ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 106 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்தது.

அந்த வகையில் நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 396 ரன்களையும், இங்கிலாந்து அணி 253 ரன்களையும் குவித்தது.

- Advertisement -

பின்னர் 143 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணியானது தங்களது இரண்டாவது இன்னிங்சில் 255 ரன்களை குவிக்கவே இங்கிலாந்து அணிக்கு 399 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதனை துரத்தி விளையாடிய இங்கிலாந்து அணி 292 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து இந்திய அணி பெற்ற வெற்றி குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : எங்களது அணியின் சாம்பியன் பிளேயர் ஜஸ்ப்ரீத் பும்ரா. முக்கியமான போட்டிகளில் அவர் இதேபோன்ற செயல்பாடுகளை தொடர்ச்சியாக எங்களுக்கு வழங்கி வருகிறார். இதுபோன்ற போட்டிகளில் வெற்றி பெற வேண்டுமெனில் அணியின் ஒட்டு மொத்த வீரர்களின் சிறப்பான ஆட்டமும் வெளிப்பட வேண்டும்.

- Advertisement -

அந்த வகையில் இந்த போட்டியில் நாங்கள் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டதாக உணர்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதுவும் இதுபோன்ற ஒரு சவாலான ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் முன் வந்து சிறப்பாக பந்துவீச வேண்டும். அந்த வகையில் அனைவருமே சிறப்பாக செயல்பட்டுள்ளனர். யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு மிகச்சிறந்த வீரராக மாறி வருகிறார்.

இதையும் படிங்க : 106 ரன்ஸ்.. வீழ்வேன் என நினைத்தாயோ.. இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்த இந்தியா.. மாஸ் கம்பேக்

போட்டியின் சூழ்நிலை நன்றாக புரிந்து கொண்டு மிகச் சிறப்பாக விளையாடுகிறார். இன்னும் அவர் இந்திய அணியில் நிறைய தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. அவருக்கு நாங்கள் நிறைய சலுகைகளை வழங்கியுள்ளோம். அதையெல்லாம் எடுத்துக்கொண்டு அவர் இதேபோன்று தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என ரோகித் சர்மா பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement