106 ரன்ஸ்.. வீழ்வேன் என நினைத்தாயோ.. இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்த இந்தியா.. மாஸ் கம்பேக்

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட பெரிய டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலையில் பிப்ரவரி இரண்டாம் தேதி விசாகப்பட்டினத்தில் துவங்கிய இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா வெளியிட்ட முக்கிய வீரர்கள் யாருமே 35 ரன்கள் கூட தாண்டாமல் பின்னடைவை ஏற்படுத்தினார். இருப்பினும் அவர்களுக்கும் சேர்த்து அபாரமாக விளையாடிய துவக்க வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதமடித்து 209 ரன்கள் குவித்த நிலையில் இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜேம்ஸ் ஆண்டர்சன், ரெஹன் அஹ்மத், சோயப் பஷீர் தலா 3 விக்கெட்களை எடுத்தனர்.

- Advertisement -

மாஸ் கம்பேக்:
அதன் பின் களமிறங்கிய இங்கிலாந்து முடிந்தளவுக்கு போராடியும் இந்தியாவின் நேர்த்தியான பந்து வீச்சில் 253 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 76, பென் ஸ்டோக்ஸ் 47 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 6, குல்தீப் யாதவ் 3 விக்கெட்களை. அதை தொடர்ந்து 143 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய இந்தியா 2வது இன்னிங்சில் போராடி 255 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்திய அணிக்கு ரோகித் சர்மா,ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அதிகபட்சமாக சுப்மன் கில் சதமடித்து 104, அக்சர் படேல் 45, அஸ்வின் 29 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக டாம் ஹார்லி 4 விக்கெட்டுகள் எடுத்தார். இறுதியில் 399 என்ற பெரிய இலக்கை துரத்திய இங்கிலாந்துக்கு ஒரு பக்கம் ஜாக் கிராவ்லி சிறப்பாக விளையாடிய நிலையில் எதிர்புறம் பென் டுக்கெட் 18, ரெஹன் அஹ்மத் 23, ஜோ ரூட் 16 ரன்களில் அஸ்வின் – அக்சர் படேல் சுழலில் அவுட்டானார்கள்.

- Advertisement -

அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் போராடிய ஜாக் கிராவ்லி 73 ரன்களில் குல்தீப் சுழலில் சிக்கியது திருப்பு முனையாக அமைந்தது. ஏனெனில் அதற்கடுத்த சில ஓவர்களில் ஜானி பேர்ஸ்டோ 26 ரன்களில் பும்ரா வேகத்தில் அவுட்டாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 11 ரன்களில் ரன் அவுட்டானார். இறுதியில் பென் போக்ஸ் 36, டாம் ஹார்ட்லி 36 ரன்கள் எடுத்துப் போராடியும் இங்கிலாந்தை 292 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: ஒருவழியா தப்பிச்சிட்டாரு.. தனக்கு காத்திருந்த ஆபத்தில் இருந்து தப்பிய சுப்மன் கில் – செம லக் தான்

அதிகபட்சமாக அஸ்வின் மற்றும் பும்ரா தலா 3 விக்கெட்டுகள் எடுத்து வெற்றியை உறுதி செய்தனர். குறிப்பாக 600 ரன்களாக இருந்தாலும் அடிப்போம் என்று எச்சரித்த இங்கிலாந்தை அதிரடி காட்ட விடாமல் சுருட்டி வீசிய இந்தியா அபார வெற்றி பெற்றது. அந்த வகையில் முதல் போட்டியில் கையில் வைத்திருந்த வெற்றியை பறித்த இங்கிலாந்துக்கு இப்போட்டியில் தோல்வியை பரிசளித்த இந்தியா சொந்த மண்ணில் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்பது போல் தக்க பதிலடி கொடுத்து 1 – 1* (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement