டி20 கிரிக்கெட்டுல எனக்கு பிடிச்ச பேட்டிங் பொசிஷன்னா அது இந்த இடம் தான் – ஷ்ரேயாஸ் ஐயர் ஓபன்டாக்

Shreyas-iyer
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே அண்மையில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணியானது 3 க்கு 0 என்ற கணக்கில் வாஷ் அவுட் செய்து அசத்தலான வெற்றியை பெற்றது. அதோடு மட்டுமின்றி டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக தற்போது இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோற்காமல் வெற்றிநடை போட்டு வருகிறது. இந்த தொடரில் இந்திய அணியின் செயல்பாடு அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றது.

Shreyas

- Advertisement -

இந்த தொடரில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓய்வு எடுத்துக் கொண்டதன் காரணமாகவும் சூரியகுமார் யாதவிற்கு ஏற்பட்ட காயம் காரணமாகவும் ஷ்ரேயாஸ் ஐயருக்கு மூன்றாவது இடத்தில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர் மூன்றாவது இடத்தில் அதாவது விராட் கோலி இறங்கும் அந்த இடத்தில் களம் இறங்கி மூன்று போட்டிகளிலுமே அரைசதம் கடந்தது மட்டுமின்றி ஒரு போட்டியில் கூட ஆட்டமிழக்காமல் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

மூன்று போட்டிகளில் விளையாடிய அவர் 174.36 ஸ்ட்ரைக் ரேட் உடன் 204 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதினையும் வென்று அசத்தியிருந்தார். டி20 கிரிக்கெட்டில் காயத்திற்கு பிறகு மீண்டு வந்த அவர் இப்படி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது இந்திய அணியின் உலக கோப்பை அணியை தேர்வு செய்வதில் ஒரு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் தற்போதைய இந்திய அணியில் விளையாடி வரும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சிறப்பாக விளையாடி வருவதால் எந்தெந்த வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற சந்தேகம் அனைவருக்கும் உள்ளது.

shreyas 1

இந்நிலையில் இந்த இலங்கை தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் ஐயரை மிடில் ஆர்டரில் விளையாட வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன. இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் தான் விளையாட விரும்பும் விருப்பமான இடம் எது என்பது குறித்து அவர் மனம் திறந்த பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : என்னை பொறுத்தவரை எப்போதுமே டாப் 3-ல் விளையாடும் போது அணியின் ரன் குவிப்பை கட்டமைக்க முடியும்.

- Advertisement -

அந்த வகையில் நான் நிச்சயம் மூன்றாவது இடத்தில் விளையாடவே விருப்பப்படுகிறேன். பின்வரிசையில் களமிறங்கினால் அணியின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு விளையாட வேண்டும் ஆனால் 3 ஆவது இடத்தில் விளையாடும் போது சற்று சுதந்திரமாக அணியை பெரிய ஸ்கோருக்கு அழைத்துச் செல்லவும் முடியும் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : 100-200 பால் ஆடலனா அவருக்கு தூக்கமே வராது. வலைப்பயிற்சியில் என்னை கஷ்டப்படுத்தும் வீரர் – ஷமி ஓபன்டாக்

விராட் கோலி இந்த இலங்கை தொடரை தவறவிட்டு இருந்தாலும் இனிவரும் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக மூன்றாவது இடத்திலேயே விளையாடுவார் என்பதனால் மீண்டும் ஷ்ரேயாஸ் ஐயர் 4 அல்லது 5 ஆவது இடத்திற்கு தள்ளப்படுவார் என்று தெரிகிறது. மேலும் தற்போதுள்ள இளம் வீரர்கள் அனைவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் எந்தெந்த வீரர்களை அணியில் தேர்வு செய்வது என்று ஒரு பலமான தலைவலி இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement