100-200 பால் ஆடலனா அவருக்கு தூக்கமே வராது. வலைப்பயிற்சியில் என்னை கஷ்டப்படுத்தும் வீரர் – ஷமி ஓபன்டாக்

Shami
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றி தங்களது வெற்றி நடையை தொடர்ந்து வருகிறது. இதனை அடுத்து இந்தியாவில் வருகிற 26-ஆம் தேதி ஐபிஎல் தொடரும், ஐபிஎல் தொடர் முடிவடைந்த பின்னர் இங்கிலாந்து செல்லும் இந்திய அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாட இருக்கிறது.

panchal

- Advertisement -

இப்படி அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடி வரும் இந்திய அணியின் அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்பட்டு வரும் வேளையில் அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியும் தனது அட்டகாசமான ஆட்டத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் இந்த இலங்கை டெஸ்ட் தொடருக்கு முன்னதாக முஹம்மது ஷமி அளித்துள்ள பேட்டி தற்போது இணையத்தில் அதிக அளவு பகிரப்பட்டு வருவது மட்டுமின்றி ரசிகர்களாலும் சுவாரசிய பதிவாக பார்க்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் நிறைய போட்டிகளில் விளையாடி அனுபவமுள்ள ஷமிக்கு தற்போது 31 வயது தான் ஆகிறது என்பதனால் இன்னும் 5-6 ஆண்டுகள் அவர் விளையாடுவதற்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு தயாராகும்போது வலைப் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் தான் வலைப்பயிற்சியில் பந்துவீச கஷ்டப்படும் ஒரு இந்திய பேட்ஸ்மேன் குறித்து அவர் தனது கருத்தினை அளித்துள்ளார்.

Pujara

இதுகுறித்து அவர் கூறுகையில் : எப்போதுமே நாங்கள் ஒரு தொடருக்கு முன்பாக வலைப் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் எப்போது நான் வலைப்பயிற்சியில் ஈடுபட்டாலும் புஜாரா என்னை பந்துவீச அழைப்பார். அப்படி நான் அவருக்கு எதிராக பந்து வீசும்போது 100 முதல் 200 பந்துகளை அவர் என்னிடம் எதிர்கொள்வார். அப்படி எதிர் கொள்ளவில்லை என்றால் அவருக்கு அன்றைக்கு தூக்கமே வராது.

- Advertisement -

அந்த அளவிற்கு வலைப்பயிற்சியில் என்னை தொடர்ந்து பந்துவீச சொல்லுவார். டெஸ்ட் கிரிக்கெட்டில் பொதுவாக புஜாரா எத்தனை பந்துகளை எடுத்துக் கொள்வார் என்பது நாம் அறிந்ததே. அந்த வகையில் பயிற்சியின் போதும் விடாமல் என்னை 100 முதல் 200 பந்துகள் நாளொன்றுக்கு வீச சொல்வார் பயிற்சியின் போது நான் பந்துவீச கஷ்டப்படும் ஒரே ஒரு பேட்ஸ்மென் என்றால் அது புஜாரா தான் என முகமது சமி கூறியுள்ளார்.

இதையும் படிங்க : எங்களுக்கு தாய்நாட்டை விட இந்தியாவில் நடைபெறும் இந்த தொடர் தான் முக்கியம் ! தெ.ஆ வீரர்கள் முடிவு

34 வயதான முன்னணி அனுபவ வீரர் புஜாரா இந்திய அணிக்காக இதுவரை 95 போட்டிகளில் விளையாடி 6713 ரன்களை குவித்துள்ளார். அதில் 18 சதங்களும் 32 அரை சதங்களும் அடங்கும். இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாகவே அவரது பார்மில் இருந்த தடுமாற்றம் காரணமாக தற்போது ரஹானேவுடன் சேர்த்து புஜாராவையும் நீக்கிவிட்டு இலங்கை தொடரில் அவர்களுக்கு பதிலாக விஹாரி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயரை இந்திய அணி நிர்வாகம் விளையாட வைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement