ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 4ஆம் தேதி நடைபெற்ற 54வது போட்டியில் பஞ்சாப் 37 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை தோற்கடித்தது. தரம்சாலா மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் 236/5 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 91, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 45, சசாங் சிங் 33*, ஜோஸ் இங்லிஷ் 30 ரன்கள் எடுத்தனர்.
அடுத்து விளையாடிய லக்னோ அணி ஆரம்பம் முதலே தடுமாற்றமாக விளையாடி 20 ஓவரில் 199/7 ரன்களை மட்டுமே எடுத்து தோற்றது. அந்த அணிக்கு நிக்கோலஸ் பூரான் 6, மார்ஷ் 0, மார்க்ரம் 13, கேப்டன் பண்ட் 18 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதிகபட்சமாக ஆயுஷ் படோனி 74, அப்துல் சமத் 45 ரன்கள் எடுத்தும் 6வது தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.
பஞ்சாப் வெற்றி:
அதனால் 7வது வெற்றியைப் பெற்ற பஞ்சாப் அணிக்கு அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3, ஓமர்சாய் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்கள். இதனால் உலகின் அழகான தரம்சாலா மைதானத்தில் 12 வருடங்கள் கழித்து பஞ்சாப் வெற்றி பெற்றது. கடைசியாக 2013இல் வென்ற அந்த அணி அதன் பின் அங்கே சந்தித்த 4 தோல்விகளை இந்தப் போட்டியில் நிறுத்தி வென்றுள்ளது.
இந்நிலையில் தரம்சாலா மைதானத்தில் தங்களுடைய மோசமான ரெக்கார்ட் பற்றி தெரியாமலேயே இந்தப் போட்டியில் விளையாடி வென்றதாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார். மேலும் அனைத்து வீரர்களும் கடினமான உழைப்பதாலும் அதற்கு அதிர்ஷ்டம் கை கொடுப்பதாலும் தொடர்ந்து வெற்றி பெறுவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “உண்மையில் இந்த வெற்றியால் மகிழ்ச்சி. அனைவரும் சரியான நேரத்தில் அசத்துகின்றனர்”
ஸ்ரேயாஸ் மகிழ்ச்சி:
“ஒவ்வொரு வீரர்களிடமும் கிடைக்கும் பங்களிப்பு மகத்தானது. பிரப்சிம்ரன் இன்று அற்புதமாக விளையாடியதைப் பார்த்தது கண்களுக்கு சிறப்பாக இருந்தது. நல்லவேளையாக தரம்சாலா மைதானத்தில் எங்களுடைய ரெக்கார்ட் பற்றி எனக்குத் தெரியாது. பிட்ச்சை பார்த்து போட்டியை வெல்ல வேண்டும் என்பதே எனது மனநிலையாக இருந்தது. இதுவரை நாங்கள் அதிர்ஷ்டத்துடன் இருந்துள்ளோம்”
இதையும் படிங்க: 37 ரன்ஸ்.. பந்துக்கு பதில் காற்றில் பறந்த பேட்.. ரிஷப் பண்ட் சொதப்பலால் பஞ்சாப் 12 வருட சாதனை வெற்றி
“எங்களுடைய அர்ப்பணிப்பு, கடின உழைப்பு ஆகியவற்றால் அதிர்ஷ்டம் இருக்கிறது. நீங்கள் வீரர்கள் அனைவரும் தங்களுடைய வேலையை அறிந்து சரியான நேரத்தில் அசத்துகின்றனர். நாங்கள் களத்தில் நகரும் விதம் மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றில் மட்டுமே சரியாக இருக்க வேண்டும். புள்ளி விவரங்களைப் பற்றி அதிகம் சிந்திக்காமல் உங்களுக்கு நீங்களே ஆதரவு கொடுத்து உங்களது உள்ளுணர்வுகளைப் பின்பற்றி எப்படி அசத்த முடியும் என்று பார்க்க வேண்டும். வெற்றி முடிவு என்பது முக்கியமானது” என்று கூறினார்.



