ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே நான்காம் தேதி தரம்சாலாவில் 54வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் 20 ஓவரில் அதிரடியாக விளையாடி 236-5 ரன்கள் குவித்து மிரட்டியது. அந்த அணிக்கு துவக்க வீரர் பிரியான்ஸ் ஆர்யா 1 ரன்னில் அவுட்டானார்.
ஆனால் மறுபுறம் பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக விளையாடி 6 பவுண்டரி 7 சிக்ஸருடன் 91 (48) ரன்கள் விளாசி அசத்தினார். அவருடன் மிடில் ஆடரில் ஜோஸ் இங்லீஷ் 30 (14), கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 45 (25), நேஹால் வதேரா 16 (9) ரன்கள் எடுத்தார்கள். கடைசி நேரத்தில் சசாங் சிங் 33* (15), மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் 15* (5) ரன்கள் அடித்து ஃபினிஷிங் கொடுத்தனர்.
பறந்த பேட்:
அதிகபட்சமாக ஆகாஷ் மகராஜ், திக்வேஷ் ரதி தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்து விளையாடிய லக்னோ அணிக்கு துவக்க வீரர்கள் ஐடென் மார்க்ரம் 13, மிட்சேல் மார்ஷ் 0 ரன்களில் அர்ஷ்தீப் வேகத்தில் விக்கெட்டை இழந்தனர். அதோடு நிற்காத அர்ஷ்தீப் அடுத்து வந்த நிக்கோலஸ் பூரானை 6 ரன்னில் அவுட்டாக்கி ஆரம்பத்திலேயே தெறிக்க விட்டார்.
அதனால் 27/3 என தடுமாறிய லக்னோவை அடுத்ததாக ரிஷப் பண்ட் – ஆயுஷ் படோனி ஆகியோர் ஜோடி சேர்ந்து காப்பாற்ற முயற்சித்தனர். அதில் இத்தொடர் முழுவதுமே திணறலாக விளையாடி வந்த ரிஷப் பண்ட் இப்போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற வைக்க வேண்டிய கட்டாயத்தில் விளையாடினார். ஆனால் அப்படிப்பட்ட அவர் ஆரம்பம் முதலே திணறலாக பேட்டிங் செய்தார்.
பஞ்சாப் வெற்றி:
அந்த தடுமாற்றத்தில் ஓமர்சாய் வீசிய 8வது ஓவரின் 5வது பந்தை அதிரடியாக எதிர்கொண்ட அவர் பேட்டை கையிலிருந்து விட்டார். அந்த பேட் பந்தை விட காற்றில் அதிக உயரத்தில் பறந்தது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும் சிரிப்பையும் உண்டாக்கியது. மறுபுறம் பந்து நேராக ஃபீல்டர் கைகளுக்கு சென்றதால் ரிஷப் பண்ட் 18 (17) ரன்னில் அவுட்டாகி சொதப்பி ஏமாற்றத்தையே கொடுத்தார்.
அடுத்து வந்த டேவிட் மில்லர் 11 (8) ரன்னில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார். அவருக்கு அடுத்ததாக வந்த அப்துல் சம்மத் அதிரடியாக விளையாடி 45 (24) ரன்னில் பெவிலியன் திரும்பினார். இறுதியில் மறுபுறம் அபாரமாக விளையாடி போராடிய ஆயுஸ் படோனி 74 (40) ரன்கள் எடுத்தும் லக்னோவை 20 ஓவரில் 199/7 ரன்களுக்கு கட்டுப்படுத்திய பஞ்சாப் 37 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இதையும் படிங்க:
அந்த அணிக்கு அதிகபட்சமாக அர்ஷ்தீப் 3, ஓமர்சாய் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இதன் வாயிலாக தரம்சாலா மைதானத்தில் 12 வருடங்கள் கழித்து பஞ்சாப் முதல் முறையாக சாதனை வெற்றி பெற்றது. கடைசியாக 2013இல் வென்ற அந்த அணி அதன் பின் சந்தித்த 4 தோல்விகளை தற்போது நேரத்தில் வென்றுள்ளது. அதையும் சேர்த்து 11 போட்டிகளில் 7வது வெற்றியைப் பெற்ற பஞ்சாப் 2வது இடத்திற்கு முன்னேறியது.



