ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 15ஆம் தேதி 31வது போட்டி நடைபெற்றது. முல்லான்பூரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் தடுமாற்றமாக விளையாடி 15.3 ஓவரில் 111க்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக பிரான்ஸ் ஆர்யா 22, பிரப் சிம்ரன் 30 ரன்கள் எடுத்த நிலையில் கொல்கத்தாவுக்கு அதிகபட்சமாக ராணா 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
பின்னர் விளையாடிய கொல்கத்தாவை அற்புதமாக பௌலிங் செய்த பஞ்சாப் 15.1 ஓவரில் 95க்கு சுருட்டி வீசி தங்களுடைய நான்காவது வெற்றியைப் பெற்றது. மேலும் ஐபிஎல் வரலாற்றில் குறைந்தபட்ச இலக்கை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தி பஞ்சாப் சாதனைப் படைத்தது. கொல்கத்தாவுக்கு அதிகபட்சமாக ரகுவன்சி 30 ரன்கள் எடுத்த நிலையில் பஞ்சாப்புக்கு அதிகபட்சமாக சஹால் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பஞ்சாப் வெற்றி:
இந்நிலையில் இந்தப் போட்டியில் பிட்ச் கொஞ்சம் சுழலுக்கு இருந்ததை பார்த்த போது வெற்றி பெற முடியும் என்ற தன்னம்பிக்கை கிடைத்ததாக பஞ்சாப் ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார். அதில் சஹால் அபாரமாக பவுலிங் தங்களை வெற்றி பெற வைத்ததைப் பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்த வெற்றியைப் பற்றி வார்த்தைகளால் விவரிப்பது கடினமாக இருக்கிறது”
“எனது உள்ளுணர்வுகளுக்கு ஆதரவு கொடுத்தேன். பந்து கொஞ்சம் சுழல்வதைப் பார்த்த போது முடிந்த வரை மூச்சை கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொண்டு பௌலிங் செய்யுமாறு சஹாலை கேட்டுக் கொண்டேன். சரியான வீரர்களை சரியான நேரத்தில் நாங்கள் அட்டாக் செய்ய வேண்டி இருந்தது. இது போன்ற வெற்றி ஸ்பெஷல் என்பதால் அதைப் பற்றி பேசுவது கடினமாக இருக்கிறது”
அட்டாக் திட்டம்:
“தனிப்பட்ட முறையில் நான் 2 பந்துகளை எதிர்கொண்டு பேட்டிங் செய்த போது ஒன்று கீழே வந்தது. மற்றொன்று பேட்டுக்கு அடியில் வந்தது. அதனால் ஸ்வீப் ஷாட் அடிப்பது அனைவருக்குமே கடினமாக இருந்தது. நல்ல பவுன்ஸ் இருந்த இந்த ஆடுகளத்தில் நாங்கள் வெற்றிக்கு தேவையான இலக்கை எடுத்தோம். பவுன்ஸ் சீராக இல்லாததை மனதில் வைத்து செயல்படுமாறு எங்களுடைய பவுலர்களிடம் சொன்னேன்”
இதையும் படிங்க: வெறும் 111 ரன்ஸ் வெச்சு கொல்கத்தாவை சாய்த்த பஞ்சாப்.. சிஎஸ்கேவை முந்தி 17 வருட சரித்திர சாதனை வெற்றி
“ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் எடுத்தது எங்களுக்கு வேகத்தை கொடுத்தது. அதை 2 புதிய பேட்ஸ்மேன்கள் வந்து தங்கள் பக்கம் எடுக்க முயற்சித்தனர். சஹால் வந்து பந்தை சுழற்றியதைப் பார்த்ததும் வெற்றி பெற முடியும் என்ற எதிர்பார்ப்பும் தன்னம்பிக்கையும் எங்களுக்கு உச்சமாக வந்தது. எதிரணி பேட்ஸ்மேன்கள் முகத்துக்கு முன்பே அட்டாக் செய்யும் ஃபீல்டிங்கைநிறுத்தி அவர்களைத் தவறு செய்ய வைக்க வைத்தேன். இந்த வெற்றியால் அதிகம் ஆடாமல் பணிவுடன் இருந்து நேர்மறை விஷயங்களை எடுத்துக்கொண்டு அடுத்தப் போட்டிக்கு செல்வது முக்கியம்” என்று கூறினார்.