வெறும் 111 ரன்ஸ் வெச்சு கொல்கத்தாவை சாய்த்த பஞ்சாப்.. சிஎஸ்கேவை முந்தி 17 வருட சரித்திர சாதனை வெற்றி

PBKS vs KKR
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 15ஆம் தேதி சண்டிகரில் 31வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப்புக்கு கடந்தப் போட்டியின் நாயகன் பிரியான்ஸ் ஆர்யா மீண்டும் அதிரடியாக விளையாடி 22 (12) ரன்கள் எடுத்த போது ஹர்ஷித் ரானா அவுட்டாக்கினார்.

அதோடு நிற்காத அவர் அதற்கடுத்ததாக வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை டக் அவுட்டாக்கி மறுபுறம் அதிரடிக் காட்டிய பிரப்சிம்ரன் சிங்கை 30 ரன்னில் காலி செய்தார். அதே போல மிடில் ஆர்டரில் விளையாட முயற்சித்த ஜோஸ் இங்கிலீஷ் 2, மேக்ஸ்வெல் 2 ரன்னில் வருண் சக்கரவர்த்தி சுழலில் போல்ட்டானார்கள். போதாகுறைக்கு நேஹல் வதேரா 10 (9) ரன்னில் அவுட்டானார்.

- Advertisement -

சரிந்த பஞ்சாப்:

இறுதியில் சசாங் சிங் 18, சேவியர் பார்லெட் 11 ரன்கள் எடுத்தும் மற்ற வீரர்கள் பெரிய ரன்களை எடுக்கத் தவறினர். அதனால் 15.3 ஓவரில் 111 ரன்களுக்கு பஞ்சாப்பை சுருட்டி வீசிய கொல்கத்தாவுக்கு அதிகபட்சமாக சுனில் நரைன் 2, தமிழகத்தின் வருண் சக்கரவர்த்தி 2, ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளை சாய்த்தார்கள். அடுத்து களமிறங்கிய கொல்கத்தாவுக்கு சுனில் நரைன் 5, டீ காக் 2 ரன்னில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள்.

அதனால் 7-2 என தடுமாறிய கொல்கத்தாவுக்கு 3வது விக்கெட்டுக்கு 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் ரஹானேவை 17 ரன்னில் சஹால் காலி செய்தார். அவருடன் சேர்ந்து மறுபுறம் அதிரடி காட்டிய ரகுவன்சியும் 37 (28) ரன்னில் சஹால் அவுட்டாக்கினார். அடுத்ததாக வந்த வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக விளையாட முயற்சித்த போது 7 (4) ரன்னில் மேக்ஸ்வெல் சுழலில் சிக்கினார்.

- Advertisement -

பஞ்சாப்பின் சரித்திரம்:

போதாகுறைக்கு ஃபினிஷிங் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் 2, ரமன்தீப் சிங் 0 ரன்னில் சஹால் சுழலில் அவுட்டானதால் 79/8 என கொல்கத்தா சரிந்தது. அப்போது மறுபுறம் இருந்த ரசல் 14வது ஓவரில் சஹாலுக்கு எதிராக 0, 6, 0, 6, 4, 0 என அதிரடியாக விளையாடி போராடினார். ஆனால் எதிர்புறம் வைபவ் 0 ரன்களில் அவுட்டாக மறுபுறம் வெற்றி பெற வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரசல் 17 (11) ரன்னில் மார்கோ யான்சென் வேகத்தில் போல்ட்டானார்.

இதையும் படிங்க: ருதுராஜ், ஆடம் ஜாம்பாவை தொடர்ந்து 3 ஆவது வீரராக காயம் காரணமாக விலகிய – நட்சத்திர பஞ்சாப் வீரர்

அதனால் 15.1 ஓவரில் கொல்கத்தாவை 95க்கு சுருட்டி வீசிய கொல்கத்தா 16 ரன்கள் வித்தியாசத்தில் திரில்லர் வெற்றி பெற்றது. இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் மிகவும் குறைந்தபட்ச இலக்கை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய அணி என்ற சென்னையின் சாதனையை உடைத்த பஞ்சாப் புதிய சரித்திர சாதனை படைத்தது. இதற்கு முன் இதே பஞ்சாப்புக்கு எதிராக 2009இல் சென்னை 116 ரன்களை முந்தைய சாதனை. பஞ்சாப்புக்கு அதிகபட்சமாக சஹால் 4, மார்கோ யான்சென் 3 விக்கெட்டுகள் எடுத்தனர்

Advertisement