ருதுராஜ், ஆடம் ஜாம்பாவை தொடர்ந்து 3 ஆவது வீரராக காயம் காரணமாக விலகிய – நட்சத்திர பஞ்சாப் வீரர்

PBKS
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் பத்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடி வரும் வேளையில் நாளுக்கு நாள் போட்டி சுவாரஸ்யமாக நடைபெற்று வருவதால் இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

காயம் காரணமாக ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகிய பஞ்சாப் வீரர் :

இந்நிலையில் இந்த நடப்பு ஐபிஎல் தொடரில் வலிமையான அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் பஞ்சாப் கிங்ஸ் அணியானது இதுவரை 5 போட்டிகளில் விளையாடி மூன்று வெற்றி மற்றும் இரண்டு தோல்வியை பெற்று 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து ஏப்ரல் 15-ஆம் தேதி நடைபெற இருக்கும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லாக்கி பெர்குசன் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது இந்த விலகல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சென்னை அணியில் விளையாடிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் எஞ்சியுள்ள இந்த தொடரில் இருந்து வெளியேறினார். அதன்பிறகு சன் ரைசர்ஸ் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ஆடம் ஜாம்பாவும் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகினார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்த தொடரில் இருந்து பாதியிலேயே காயம் காரணமாக விலகும் மூன்றாவது வீரராக லாக்கி பெர்குசன் மாறியுள்ளார். இந்த தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இதையும் படிங்க : ஐ.பி.எல் வரலாற்றில் சி.எஸ்.கே அணிக்காக தனித்துவமான சாதனையை நிகழ்த்திய – ஷேக் ரஷீத்

கடைசியாக சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது இரண்டு பந்துகளை மட்டுமே வீசிய அவர் தொடைப்பகுதியில் ஏற்பட்ட தசைப் பிடிப்பு காரணமாக பாதியிலேயே களத்தில் இருந்து ஓய்வறைக்கு திரும்பியிருந்தார். தற்போது அவரது காயத்தின் தன்மை அதிகரித்துள்ளதால் அவர் எஞ்சியுள்ள இந்த தொடரில் இருந்தே வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement