ஐ.பி.எல் கிரிக்கெட் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது பொதுவாகவே பிளேயிங் லெவனில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த அந்த அணியாகவே கடந்த பல ஆண்டுகளாக பார்க்கப்பட்டு வருகிறது. ஏனெனில் எப்பொழுதுமே சென்னை அணி தோல்வியை சந்தித்தாலும், வெற்றி பெற்றாலும் ஒரு நிலையான அணியை கொண்டே ஐபிஎல் தொடரை முழுவதையும் எதிர்கொள்ளும். அதுவே சி.எஸ்.கே அணியின் வாடிக்கையாக இருந்து வந்தது.
அறிமுகம் போட்டியிலேயே சாதனையை நிகழ்த்திய ஷேக் ரஷீத் :
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சென்னை அணியில் சில மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும் வேளையில் நேற்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ஒரு மிகப்பெரிய மாற்றம் நடைபெற்றது.
அந்த வகையில் டேவான் கான்வேவுக்கு பதிலாக அறிமுகவீரராக ஷேக் ரஷீத் களமிறக்கப்பட்டார். நேற்றைய போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ அணி 166 ரன்கள் குவித்திருந்த வேளையில் 167 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியில் துவக்க வீரராக களமிறங்கிய ஷேக் ரஷீத் 19 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரிகளுடன் 27 ரன்களை குவித்து அசத்தினார்.
ருதுராஜ் கெய்க்வாடுக்கு மாற்று வீரராக நேற்றைய போட்டியில் களமிறங்கிய அவர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இனியும் அவர் தொடர்ச்சியாக துவக்க வீரராக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் துவக்க வீரராக களமிறங்கியதன் மூலம் அவர் சிஎஸ்கே அணிக்காக ஒரு வினோதமான சாதனை ஒன்றினையும் நிகழ்த்தியுள்ளார். அந்த சாதனை யாதெனில் : இதுவரை அனுபவம் வாய்ந்த வயது அதிகமான வீரர்களையே நம்பி விளையாட வைக்கும் சென்னை அணியில் 20 வயதிலேயே துவக்க வீரராக அறிமுகமான இவர் மிகக் குறைந்த வயதில் சிஎஸ்கே அணிக்காக அறிமுகமான வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க : இதை செய்றதுல தப்பில்ல.. ஆனா இந்தியர்கள் காப்பி அடிக்காம ப்ராவோ மாதிரி செய்ங்க.. கவாஸ்கர் அட்வைஸ்
இவருக்கு முன்னதாக சாம் கரண் 22 வயதில் சிஎஸ்கே அணியின் துவக்க வீரராக களமிறங்கிய வேளையில் தற்போது 20 வயதிலேயே சென்னை அணிக்காக துவக்க வீரராக களமிறங்கி ஷேக் ரஷீத் அவரது சாதனையை முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.