ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக 2வது வாரத்தைக் கடந்து நடைபெற்று வருகிறது. முன்னதாக கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன் அரைசதம் மற்றும் சதத்தை அடிக்கும் போதும் பவுலர்கள் விக்கெட் எடுக்கும் போதும் அதைக் கொண்டாடுவது வழக்கமாகும். அதில் பெரும்பாலானவர்கள் சாதாரணமாகக் கொண்டாடும் முறையில் சில வீரர்கள் மட்டும் வித்தியாசமாக ரசிகர்களை கவரும் வகையில் கொண்டாடுவது வாடிக்கையாகும்.
அது போல இந்திய வீரர் முகமது சிராஜ் விக்கெட் எடுக்கும் போதெல்லாம் ஜாம்பவான் கால்பந்து வீரர் ரொனால்டோ போல காற்றில் தாவிக் கொண்டாடுவது வழக்கமாகும். அந்த வரிசையில் தற்போது இளம் இந்திய வீரர் திக்வேஷ் ரதி இணைந்துள்ளார். அதாவது பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் பிரியான்ஸ் ஆர்யா விக்கெட்டை எடுத்த அவர் கையில் ஏதோ எழுதி வெளியே போ என்ற வகையில் கொண்டாடினார்.
காப்பி அடிக்காதிங்க:
அதற்கு பிசிசிஐ 25% சம்பளம் அபராதம் மற்றும் ஒரு கருப்பு புள்ளியை தண்டனையாக வழங்கியது. அப்போதும் மாறாத அவர் அதற்கடுத்த போட்டியிலும் தன்னுடைய இடத்திலேயே இருந்து மீண்டும் அப்படியே கொண்டாடினார். அதனால் மேலும் கோபமடைந்த பிசிசிஐ 50% அபராதம் மற்றும் 2 கருப்புப் புள்ளிகளை தண்டனையாக அறிவித்தது.
அப்போது ஒருமுறை வெஸ்ட் இண்டீஸ் வீரர் கேஸ்ரிக் வில்லியம்ஸ் இப்படி செய்து இந்தியாவின் விராட் கோலியிடம் அடி வாங்கியதை மறக்கவில்லையா? என்று அவரை சுனில் கவாஸ்கர் விமர்சித்தார். ஆனால் அப்போதும் மாறாத திக்வேஷ் அதற்கடுத்த போட்டியில் விக்கெட்டை எடுத்த பின் தரையில் எழுதிக் கொண்டாடினர். இருப்பினும் அதற்கு பிசிசிஐ எந்த தண்டனையும் வழங்காமல் அவரைக் கொண்டாட விட்டுள்ளது.
கவாஸ்கர் அட்வைஸ்:
இந்நிலையில் இப்படி கொண்டாடுவதில் தவறில்லை. ஆனால் அதை யாரையும் பார்த்து காப்பியடிக்காமல் வெஸ்ட் இண்டீஸின் ட்வயன் ப்ராவோ போல இந்தியர்கள் தங்களுக்கென்று தனித்துவமானக் கொண்டாட்டத்தை உருவாக்குங்கள் என்று சுனில் கவாஸ்கர் ஆலோசனை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “தற்போது கால்பந்து போட்டிகள் உலகம் முழுவதிலும் ஒளிபரப்பப்படுகின்றன”
இதையும் படிங்க: மேஜிக் ரன் அவுட் செய்தது எப்படி? ஜஹீர் கானிடம் விளக்கிய தோனி.. பயந்தது பற்றி கூறிய பண்ட்
“அதில் தங்களுடைய அபிமான கால்பந்து வீரர்களின் கொண்டாட்டத்தைப் பார்த்து கிரிக்கெட்டர்கள் காப்பி அடிக்கிறார்கள். கரீபியன் கிரிக்கெட்டர்கள் மட்டுமே தங்களுடைய சொந்தக் கொண்டாட்டத்தை கொண்டு வருகிறார்கள். அதை இந்தியர்களும் பார்க்க வேண்டும். ஆம் கிரிக்கெட்டிலும் நீங்கள் வித்தியாசமாக கொண்டாடலாம். ஆனால் அந்த கொண்டாட்டத்தில் ஏதேனும் பொருள் இருக்க வேண்டும். எனவே இத்தொடர் முடிவதற்கு முன்பாக நமது இந்திய வீரர்களிடம் ஏதேனும் தனித்துவமான கொண்டாட்டத்தை நம்மால் பார்க்க முடியுமா?” எனக் கூறினார்.