சிரிப்பா வருது.. அதை நான் சரியா பண்ணல.. 245 அடிச்சும் ஜெய்க்க முடியாம போக இதான் காரணம்.. ஸ்ரேயாஸ் பேட்டி

- Advertisement -

ஐபிஎல் 2025 தொடரின் 27வது போட்டியில் பஞ்சாப் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் தோற்கடித்தது. ஏப்ரல் 12ஆம் தேதி ஹைதராபாத் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் 246 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 82, பிரியான்ஸ் ஆர்யா 36, ஸ்டோய்னிஸ் 34* ரன்கள் அடித்தார்கள்.

அடுத்ததாக விளையாடிய ஹைதராபாத் உங்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்ற வகையில் சொந்த மண்ணில் பஞ்சாப்பை அடித்து நொறுக்கி 18.3 ஓவரில் 247/2 ரன்களை குவித்து வென்றது. அதனால் ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச இலக்கை சேசிங் செய்து ஹைதராபாத் சாதனை படைத்தது. மேலும் தங்களது 2வது வெற்றியைப் பெற்ற ஹைதராபாத் புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்திற்கு முன்னேறியது.

- Advertisement -

பஞ்சாப் தோல்வி:

அந்த அணியின் இந்த வெற்றிக்கு அபிஷேக் சர்மா 141 (55), டிராவிஸ் ஹெட் 66 (37) ரன்கள் விளாசி முக்கிய பங்காற்றினார்கள். இந்நிலையில் 245 ரன்கள் அடித்தும் ஹைதராபாத் அதை 18.3 ஓவரில் எடுத்து வென்றதைப் பார்க்கும் போது தமக்கு சிரிப்பு வருவதாக பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். சில கேட்ச்களை தவற விட்டதும், பவுலர்களை தாம் சரியாக மாற்றி மாற்றி பயன்படுத்தாததும், இரவு நேர பனியும் தோல்விக்கு காரணம் என்று அவர் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் அபிஷேக் ஷர்மாவை பாராட்டியுள்ள அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இந்த இலக்கு சிறப்பானது என்று நினைக்கிறேன். ஆனால் அதை 2 ஓவர்கள் மீதும் வைத்து ஹைதராபாத் சேசிங் செய்ததை நினைத்தால் எனக்கு சிரிப்பு வருகிறது. நாங்கள் சில கேட்ச்களை தவற விட்டோம். அபிஷேக் ஷர்மா அதிர்ஷ்டம் மிக்கவர். அற்புதமாக விளையாடினார்”

- Advertisement -

ஸ்ரேயாஸ் ஏமாற்றம்:

“எதிர்பார்ப்புக்கு நிகராக பவுலிங் செய்யாத நாங்கள் மீண்டும் வரைபலைக்கு சென்று திருத்திக் கொள்ள வேண்டும். ஹைதராபாத் அணியின் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அபாரமாக இருந்தது. அவர் எங்களுக்கு பயன்படுத்துவதற்கு அதிக வாய்ப்புகளை கொடுக்கவில்லை. நாங்கள் ஓவர்களை ரொட்டேஷன் செய்தது இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்க வேண்டும். பெர்குசன் விக்கெட்டுகளை எடுப்பார் என்றாலும் காயத்தை சந்தித்தார். அது விளையாட்டின் அங்கமாகும்”

இதையும் படிங்க: இதுக்கு காரணமான யுவி, சூரியகுமாருக்கு நன்றி.. பஞ்சாப்பை நொறுக்கிய திட்டம் இது தான்.. ஆட்டநாயகன் அபிஷேக் பேட்டி

“இது முன்னோக்கி செல்லும் போது நாங்கள் கற்க வேண்டிய பாடங்களாகும். நானும் வதேராவும் 230 ரன்கள் போதுமானது என்று நினைத்தோம். ஆனால் இரவு நேரத்தில் பனி வந்து எங்களது பவுலிங்கை கடினமாக மாற்றியது. ஹைதராபாத் அணியின் துவக்க வீரர்கள் உலகிற்கு அப்பாற்பட்ட வகையில் பேட்டிங் செய்தனர். அபிஷேக் விளையாடியது நான் பார்த்த ஒரு சிறந்த இன்னிங்ஸ்” என்று கூறினார்.

Advertisement