நல்லவேளை நல்லதுக்கு தோத்துட்டோம்.. ராஜஸ்தானிடம் தோற்க இதான் காரணம்.. பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் பேட்டி

Shreyas Iyer
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் ஐந்தாம் தேதி சண்டிகரில் நடைபெற்ற 18வது போட்டியில் ராஜஸ்தான் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் 206 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 67, கேப்டன் சாம்சன் 38, ரியான் பராக் 43* ரன்கள் எடுத்த நிலையில் பஞ்சாப்புக்கு அதிகபட்சமாக லாக்கி பெர்குசன் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

பின்னர் விளையாடிய பஞ்சாப் ஆரம்ப முதலே தடுமாற்றமாக பேட்டிங் செய்து 20 ஓவரில் 155-9 ரன்கள் மட்டுமே எடுத்து முதல் தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக நேஹல் வதேரா 62 ரன்கள் எடுத்த நிலையில் ராஜஸ்தானுக்கு அதிகபட்சமாக ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதனால் ராஜஸ்தான் தங்களுடைய இரண்டாவது வெற்றியை பதிவு செய்து அசத்தியது.

- Advertisement -

தோல்வியும் நல்லது:

இந்நிலையில் இந்தப் பெரிய தொடரில் சந்தித்துள்ள இத்தோல்வி நல்லது என்று பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ஏனெனில் இந்தத் தோல்வியால் தங்களது அணியில் இருக்கும் பலவீனம் மற்றும் முன்னேற வேண்டிய விஷயங்கள் தெரிந்துள்ளதாக அவர் மகிழ்ச்சி கூறியுள்ளார். அதே சமயம் இந்தப் போட்டியில் தோல்வியை சந்தித்ததற்கான காரணம் பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“180 – 185 ரன்களை சேசிங் செய்ய முடியும் என்று நான் நேர்மையுடன் கருதினேன். அதுவே இங்கு சேசிங் செய்வதற்கான சரியான இலக்கு. ஆனால் நாங்கள் எங்களது திட்டங்களை சரியாக செயல்படுத்தவில்லை. இந்தத் தோல்வித் தொடரின் துவக்கத்திலேயே கிடைத்ததில் மகிழ்ச்சி. பந்து கொஞ்சம் பிடித்து வந்த இந்த நல்ல பிட்ச்சில் அவர்களுக்கு நாங்கள் வேகத்தை வழங்கவில்லை”

- Advertisement -

முன்னேற வேண்டும்:

“பேட்டிங்கில் கொஞ்சம் நாங்கள் மெதுவாக விளையாடி பார்ட்னர்ஷிப் அமைக்க முயற்சித்திருக்க வேண்டும். அதுவே தோல்விக்கு காரணம். இந்தப் போட்டியில் நிறைய பாடங்களைக் கற்றுள்ளோம். இந்தப் போட்டி வீடியோவை பார்த்து பேட்டிங், பௌலிங் துறையில் எதை நாங்கள் நன்றாக செய்யவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்”

இதையும் படிங்க: 2023லயே ரிட்டையராகிருக்க வேண்டிய தோனியை வீட்டுக்கு அனுப்புங்க.. அதை செய்றவர் இதை செய்ய முடியாதா? திவாரி

“நாங்கள் அடுத்தடுத்த விக்கெட்டுகளையும் இழந்தோம். அது புதிய பேட்ஸ்மேன்களுக்கான நல்ல இடம் கிடையாது. நேஹல் அழுத்தத்தின் கீழ் சிறப்பாக விளையாடினார். அவர் நேரத்தை எடுத்துக்கொண்டு பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு சூழ்நிலைகளைப் பயன்படுத்தி விளையாடினார். இது போன்ற தோல்வித் தொடரின் ஆரம்பத்திலேயே கிடைத்துள்ளது உங்களை தட்டி எழுப்ப உதவும். தனிப்பட்ட முறையில் இந்தத் தோல்வி நல்லது என்று நான் கருதுகிறேன். இதிலிருந்து பாடங்களைக் கற்று முன்னேறுவதற்கான வழியை நாங்கள் பார்ப்போம்” என்று கூறினார்.

Advertisement