ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் ஐந்தாம் தேதி நடைபெற்ற 17வது போட்டியில் டெல்லி அணியிடம் 26 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை தோற்றது. அந்தப் போட்டியில் 184 ரன்களை துரத்திய சென்னை 20 ஓவரில் 158-5 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதனால் 15 வருடங்கள் கழித்து தங்களுடைய சொந்த ஊரான சேப்பாக்கத்தில் டெல்லி அணியிடம் சென்னை அவமானத் தோல்வியை சந்தித்தது.
மேலும் இந்த வருடம் தொடர்ந்து மூன்றாவது தோல்வியைப் பதிவு செய்த சென்னை புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்திற்கு விழுந்துள்ளது. அந்த தோல்விக்கு மீண்டும் டாப் 5 பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் அடிக்காதது முக்கிய காரணமானது. அதனால் மிடில் ஆர்டரில் விஜய் சங்கர் 69*, தோனி 30* ரன்கள் எடுத்தும் சென்னை அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை.
2023லயே போய்ருக்கனும்:
இருப்பினும் அதை உணராத விமர்சகர்கள் தோனி தான் தோல்விக்கு காரணம் என்று விமர்சித்து வருகிறார்கள். அந்த வரிசையில் இணைந்துள்ள முன்னாள் வீரர் மனோஜ் திவாரி 2023 ஐபிஎல் கோப்பையை வென்றதுடன் தோனி ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்று விமர்சித்துள்ளார். அதை செய்யாமல் அணிக்கு பாரமாக இருக்கும் தோனியை தற்போது சிஎஸ்கே நிர்வாகம் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர் பேசியுள்ளார்.
இது பற்றி க்ரிக்பஸ் இணையத்தில் மனோஜ் திவாரி பேசியது பின்வருமாறு. “இங்கே நான் கடினமாக பேசினால் என்னை மன்னித்து விடுங்கள். தோனி 2023 ஐபிஎல் முடிந்தவுடன் ஓய்வு பெற்றிருக்க வேண்டும். அதுவே அவருக்கான சிறந்த நேரம். இவ்வளவு வருடங்களாக விளையாடி மரியாதையை சம்பாதித்துள்ள அவர் கடந்த 2 வருடங்களாக இப்படி தோற்பதை ரசிகர்களால் பார்க்க முடியவில்லை”
வீட்டுக்கு அனுப்புங்க:
“அதனால் சென்னை ரசிகர்கள் சாலைகளில் வந்து பேட்டி கொடுத்து எவ்வாறு ரியாக்சன் கொடுக்கிறார்கள் என்று பாருங்கள். தோனி முயற்சிகளை எடுக்கிறார். அவரால் 10 ஓவர்கள் பேட்டிங் செய்ய முடியாது என்று ஸ்டீபன் பிளம்மிங் கூறுகிறார். ஆனால் 20 ஓவர்கள் கீப்பராக உட்கார்ந்து எழுந்து, டைவ் அடித்து, கேட்ச் பிடித்து, ரன் அவுட் செய்து அணிக்கு உதவி செய்யும் தோனி கொஞ்சம் முன்னதாகவே வந்து 10 ஓவர்கள் பேட்டிங் செய்ய முடியாதா?”
இதையும் படிங்க: அன்று 76 ரன்ஸ் கொடுத்த நான் இன்று ஆட்டநாயகன் விருதுடன் கம்பேக் கொடுக்க இதான் காரணம்.. ஆர்ச்சர் பேட்டி
“சென்னை அணியில் அனைத்து முடிவுகளும் தோனியை சுற்றியே எடுக்கப்படுகிறது. ஆனால் எதுவும் அவர்களுக்கு வேலை செய்யவில்லை. எனவே எந்த முயற்சிகளும் வேலை செய்யவில்லை என்பதால் நீங்கள் அணியை விட்டு வெளியேறுங்கள் என்று தோனியிடம் சென்னை நிர்வாகம் வெளிப்படையாக சொல்லி கடினமான முடிவை எடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.



