அன்று 76 ரன்ஸ் கொடுத்த நான் இன்று ஆட்டநாயகன் விருதுடன் கம்பேக் கொடுக்க இதான் காரணம்.. ஆர்ச்சர் பேட்டி

Jofra Archer
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் ஐந்தாம் தேதி சண்டிகரில் 18வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் ராஜஸ்தானுக்கு எதிராக பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் 20 ஓவரில் சிறப்பாக விளையாடி 205-4 ரன்களை குவித்து அசத்தியது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 67, கேப்டன் சஞ்சு சாம்சன் 38, ரியான் பராக் 43* ரன்கள் எடுத்து அசத்தினார்கள்.

பஞ்சாப் அணிக்கு அதிகபட்சமாக லாக்கி பெர்குசன் 2 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்ததாக விளையாடிய பஞ்சாப் அணி ஆரம்ப முதலே ராஜஸ்தானின் தரமான பந்து வீச்சில் தடுமாற்றமாக விளையாடி 20 ஓவரில் 155-9 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக நேஹல் வதேரா 62 ரன்கள் எடுத்த நிலையில் ராஜஸ்தானுக்கு அதிகபட்சமாக ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

ஆர்ச்சர் கம்பேக்:

குறிப்பாக இந்த வருடத்தின் முதல் போட்டியிலேயே ஹைதராபாத் அணி அவரை அடித்து நொறுக்கியது. அதனால் 3 ஓவரில் 76 ரன்கள் கொடுத்த ஆர்ச்சர் ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன்களை கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனை படைத்தார். அப்படிப்பட்ட அவர் இந்தப் போட்டியில் 4 ஓவரில் வெறும் 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

அதனால் இந்தப் போட்டியின் ஆட்டநாயகன் விருது வென்ற அவர் கிரிக்கெட்டில் 76 ரன்கள் கொடுத்த மோசமான போட்டிகள் அமையும் என்று கூறியுள்ளார். அதே சமயம் 25 ரன்கள் மட்டும் கொடுத்த இது போன்ற நாட்களும் அமையும் போது அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கும் ஆர்ச்சர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “தொடரின் துவக்கத்தில் அது போன்ற போட்டிகள் நடக்கும்”

- Advertisement -

ஆர்ச்சரின் தத்துவ காரணம்:

“அதையும் தாண்டி தற்போது அணியின் வெற்றியில் பங்காற்றியதில் மகிழ்ச்சி. இது போன்ற நாட்கள் வரும் போது நீங்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நல்ல விஷயங்களை மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்ளுங்கள். மோசமான விஷயங்களை முன்னேற்றத்திற்காக எடுத்துக் கொள்ளுங்கள். சில நேரங்களில் நீங்கள் அதிர்ஷ்டமிக்கவர்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்”

இதையும் படிங்க: 50 ரன்ஸ்.. பஞ்சாப்பை அசால்ட்டாக சுருட்டி வென்ற ராஜஸ்தான்.. ஷேன் வார்னேவை முந்தி சாம்சன் வரலாற்று சாதனை

“அதே போல மற்ற சில நேரங்களில் பேட்ஸ்மேன்கள் அதிர்ஷ்டம் மிக்கவர்கள் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இங்கே உங்களைப் போலவே அனைவரும் கடினமாக உழைக்கிறார்கள். அதனால் அனைவருக்கும் அனைத்து நாட்களும் உங்களுக்கு சிறப்பாக இருக்காது. ஆனால் நல்ல நாட்கள் வரும். அதை நீங்கள் மகிழ்ச்சியுடன் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் மோசமான நாட்கள் உங்களை சுற்றி இருக்கலாம்” என்று தத்துவமாக பேசினார்.

Advertisement