டெல்லியிடம் தோற்க இதான்.. பிரீமியர் லீக்கை விட மிகப்பெரிய ஐபிஎல்’லில் கம்பேக் கொடுப்போம்.. ஸ்ரேயாஸ் பேட்டி

- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 24ஆம் தேதி ஜெய்ப்பூரில் 66வது போட்டி நடைபெற்றது. அதில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற பஞ்சாப்பை லீக் சுற்றுடன் வெளியேறிய டெல்லி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் 207 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 53, மார்கஸ் ஸ்டோய்னிஸ் 44*, ஜோஸ் இங்லிஷ் 32 ரன்களை எடுத்தார்கள்.

டெல்லிக்கு அதிகபட்சமாக முஸ்தஃபீஸூர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்ததாக விளையாடிய டெல்லி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 19.3 ஓவரில் 208/4 ரன்களை எடுத்து தங்களுடைய 6வது ஆறுதல் பெற்று பெற்றது. அந்த அணிக்கு ராகுல் 35, கேப்டன் டு பிளேஸிஸ் 23, கருண் நாயர் 44 ரன்கள் எடுத்தார்கள்.

- Advertisement -

மிகப்பெரிய ஐபிஎல்:

கடைசியில் சமீர் ரிஸ்வி 58* (25) ரன்களை விளாசி நல்ல ஃபினிஷிங் கொடுத்தார். பஞ்சாப்புக்கு அதிகபட்சமாக ஹர்ப்ரீத் ப்ரார் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தங்களுடைய 4வது தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. இந்நிலையில் இப்போட்டியில் பேட்டிங்கில் போதுமான ரன்கள் எடுத்தும் சரியான லென்த்தை பின்பற்றி பவுலிங் செய்யாததே தோல்விக்கு காரணமானதாக பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார்.

மேலும் இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக் கால்பந்து தொடரை விட ஐபிஎல் பெரியது என்று தெரிவிக்கும் அவர் தோல்வியிலிருந்து கம்பேக் கொடுப்பதற்கான திட்டம் பற்றி பேசியது பின்வருமாறு. “இது சிறப்பான ஸ்கோர். பிட்ச்சில் சில மாறக்கூடிய பவுன்ஸ் இருந்தன. அங்கே நாங்கள் எங்களுடைய லென்த்தில் போதுமான அளவுக்கு கட்டுப்பாட்டுடன் செயல்படவில்லை என்று நினைக்கிறேன்”

- Advertisement -

கம்பேக் கொடுப்போம்:

“பவுன்சர் பந்துகளை நாங்கள் அதிகமாக வீசினோம். கடினமான லென்த்தை அடிக்கவில்லை. ஐபிஎல் தொடர் பிரீமியர் லீக் தொடரை விட மிகப்பெரியது. நேர்மறையாகவும் அமைதியுடனும் இருக்க வேண்டும். தோல்வியை சந்தித்தாலும் நீங்கள் அடுத்த நாளில் புத்துணர்ச்சியான மனதுடன் வரவேண்டும். அத்துடன் நிகழ்காலத்தில் இருக்க வேண்டும்”

இதையும் படிங்க: 19.3 ஓவரில் 208 ரன்ஸ்.. ஆர்சிபி, தோனியை முந்தி பஞ்சாப், ஸ்ரேயாஸ் ஐயர் மோசமான சாதனை.. டெல்லி வெற்றி

“நாங்கள் மீண்டும் வரை பலகைக்கு செல்ல வேண்டும். இது போன்ற தோல்விகளை தவிர்க்க சில வலுவான திட்டங்களுடன் வரவேண்டும். என்னுடைய உடல் நன்றாக இருக்கிறது. விரலில் மட்டுமே லேசான காயம் இருக்கிறது. அது அடுத்தப் போட்டிக்கு முன்பாக சரியாகி விடும்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் டாப் 2 இடத்தை பிடிக்க வேண்டுமெனில் பஞ்சாப் தங்களது கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Advertisement