ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியில் பஞ்சாப்பை 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த பெங்களூரு முதல் கோப்பையை வென்றது. அதனால் 17 வருடங்களாக சந்தித்து வந்த தொடர் தோல்விகளை நிறுத்திய ஆர்சிபி அணி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. மறுபுறம் மிகச்சிறப்பாக போராடிய பஞ்சாப் ஒரு சிக்சர் தங்களுடைய முதல் கோப்பையை கோட்டை விட்டது.
இந்த வருடம் 26.75 கோடிக்கு வாங்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் பஞ்சாப் அணியை மிகச்சிறப்பாக வழி நடத்தி 14 வருடங்கள் கழித்து பிளே ஆஃப் மற்றும் ஃபைனலுக்கு அழைத்துச் சென்றார். அதே போல பேட்டிங்கில் 604 ரன்களை எடுத்த அவர் வாங்கிய சம்பளத்தை விட மிகச்சிறப்பாக விளையாடினார் என்றே சொல்லலாம். ஆனால் இறுதிப்போட்டியில் 1 ரன் மட்டுமே எடுத்த அவர் வெற்றியை நழுவ விட்டு ஏமாற்றத்தைச் சந்தித்தார்.
ஸ்ரேயாஸ் சத்தியம்:
அவரைப் போலவே ப்ரீத்தி ஜிந்தா மற்றும் பஞ்சாப் ரசிகர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தைச் சந்தித்தார்கள். இருப்பினும் கடந்த 17 வருடங்களில் இல்லாத அளவுக்கு இம்முறை பஞ்சாப் அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வெறும் ஒரு சிக்ஸர் இடைவெளியில் கோப்பையை விட்டுள்ளது. அதனால் வருங்காலங்களில் கோப்பையை வெல்வோம் என்ற உறுதியான நம்பிக்கை பஞ்சாப் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வருடம் கோப்பை தவறியுள்ளதால் தம்முடைய வேலை பாதி மட்டுமே முடிந்துள்ளதாக பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். எனவே இம்முறை கிடைத்த பிரான்ஸ் ஆர்யா, நேஹல் வதேரா போன்ற இளம் வீரர்களை வைத்து அடுத்த வருடம் கோப்பையை வென்று கொடுப்பேன் என்றும் அவர் பஞ்சாப் ரசிகர்களுக்கு நம்பிக்கை வார்த்தைகளால் சத்தியம் கொடுத்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
2026இல் கம்பேக் கொடுப்போம்:
“எங்களுடைய அணியில் விளையாடிய ஒவ்வொரு தனிநபர்கள் மீதும் நான் பெருமைப்படுகிறேன். எங்களுடைய அணியில் நிறைய இளம் வீரர்கள் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார்கள். இருப்பினும் இயற்கையாகவே அவர்கள் பயமின்றி விளையாடியது அற்புதமானது. அணி நிர்வாகம், பயிற்சியாளர்கள் உட்பட உங்களுடைய அணிக்காக பங்காற்றி அனைவருக்கும் காலை வணங்குகிறேன்”
இதையும் படிங்க: 17 வருஷமா கிண்டல் மன உளைச்சலைக் கொடுத்தவங்களுக்கு நன்றி.. நல்லா தூங்கப் போறேன்.. விராட் கோலி
“அவர்கள் இல்லாமல் எங்களால் இங்கே வந்திருக்க முடியாது. இன்னும் பாதி வேலை இருக்கிறது. அடுத்த வருடம் இங்கே வந்து நாங்கள் கோப்பையை வெல்ல வேண்டும். எங்கள் வீரர்கள் ஒவ்வொருவரும் நம்மால் போட்டியை வெல்ல முடியும் என்ற நேர்மறையான மனநிலையைக் கொண்டிருப்பது சிறந்த விஷயமாகும். எங்களுடைய இளம் வீரர்கள் நிறைய அனுபவத்தைப் பெற்றிருப்பார்கள் என்று நம்புகிறேன். அடுத்த வருடம் அற்புதமான அனுபவத்துடன் வரப்போகும் அவர்களை வைத்து நாங்கள் திட்டங்களை வகுத்து நல்ல கிரிக்கெட்டை விளையாடி வெல்வோம்” என்று கூறினார்.



