17 வருஷமா கிண்டல் மன உளைச்சலைக் கொடுத்தவங்களுக்கு நன்றி.. நல்லா தூங்கப் போறேன்.. விராட் கோலி

Virat Kohli 3
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வென்று சாதனை படைத்தது. ஜூன் 3ஆம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் பஞ்சாப்பை 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தியது. அதன் காரணமாக 17 வருடங்களாக தோல்வியை மட்டுமே சந்தித்து வந்த ஆர்சிபி அணி வரலாற்றை மாற்றி எழுதி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்தது.

அதன் காரணமாக ஆர்சிபி அணி தங்கள் மீதான கிண்டல்களுக்கு பதிலடி கொடுத்துள்ளது என்றே சொல்லலாம். ஏனெனில் 2008 முதல் ஜாம்பவான்கள் தலைமையில் நட்சத்திர வீரர்களுடன் விளையாடியும் அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. குறிப்பாக லீக் போட்டிகளில் அசத்திய பெங்களூரு அணி முக்கிய நேரத்தில் சொதப்பி கோப்பையை கோட்டை விட்டு வந்தது.

- Advertisement -

17 வருட கிண்டல்கள்:

குறிப்பாக 2013 முதல் கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி 2016 சீசனில் 973 ரன்கள் அடித்து உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தி ஆர்சிபி அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார். ஆனால் இறுதிப் போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியிடம் தோற்ற பெங்களூரு கோப்பையை கோட்டை விட்டது. அப்போது முதல் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்ததால் விராட் கோலி இருக்கும் வரை ஆர்சிபி கோப்பையை வெல்லாது என்ற கிண்டல்கள் எழுந்தன.

அதனாலேயே கேப்டன்ஷிப் பொறுப்பை ராஜினாமா செய்த விராட் கோலி சாதாரண பேட்ஸ்மேனாக விளையாடினார். அதன் பின்பும் டு பிளேஸிஸ் தலைமையில் பெங்களூரு அணி 3 வருடங்கள் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்தது. அதன் காரணமாக விராட் கோலி தொடர்ந்து விமர்சனங்களையும் கிண்டல்களையும் சந்தித்து வந்தார்.

- Advertisement -

நிம்மதியா தூங்குவேன்:

தற்போது ஒரு வழியாக 18 வருடங்கள் கழித்து ஐபிஎல் கோப்பையை வென்ற விராட் கோலி தன் மீதான கிண்டல்களுக்கு பதிலடியைக் கொடுத்துள்ளார் என்றே சொல்லலாம். இந்நிலையில் 17 வருடங்களாக தம்மை கிண்டல் செய்தவர்கள் தான் ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கான பலத்தைக் கொடுத்ததாக விராட் கோலி நன்றி தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: ஐ.பி.எல் கோப்பையை வென்ற ஆர்.சி.பி கேப்டனுக்கு விலைமதிப்பில்லாத பரிசை வழங்கிய கிங் கோலி – விவரம் இதோ

“கடவுள் மகத்தானவர். தற்போது நங்கூரம் விழுந்த இடத்தில் நான் உற்சாகத்தில் தளர்ந்திருக்கிறேன். நான் சரியாக தூங்க வேண்டும். கோப்பை வெல்லாததால் நிறைய மன உளைச்சளில் இருந்தேன். நிறைய கிண்டல்களைக் கேட்டேன். நிறைய மக்கள் எங்களை கிண்டல் செய்து வேடிக்கை செய்தனர். ஆனால் அதுவே எங்களை பலமாக்கியது. எங்களுடைய ரசிகர்களுக்கும் எங்களுக்கும் இடையே உள்ள உறவு வலுவாக இருக்கிறது. தற்போது நான் நிம்மதியாக தூங்குவேன்” என்று கூறினார்.

Advertisement