ஐ.பி.எல் கோப்பையை வென்ற ஆர்.சி.பி கேப்டனுக்கு விலைமதிப்பில்லாத பரிசை வழங்கிய கிங் கோலி – விவரம் இதோ

Kohli and Rajat
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மிகச்சிறப்பாக இருந்து வருகின்றது. ஏனெனில் கடந்த ஆண்டு இரண்டாவது முறையாக தந்தையான அவர் டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணியிலும் இடம்பிடித்து விளையாடியிருந்தார். அதன் பின்னர் இந்த ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்ற இந்திய அணியிலும் இடம்பிடித்து விளையாடியிருந்தார்.

ரஜத் பட்டிதாருக்கு பரிசு வழங்கிய விராட் கோலி :

இப்படி அடுத்தடுத்த ஐசிசி கோப்பைகள் வென்றது, இரண்டாம் குழந்தை பிறந்தது என அனைத்துமே சிறப்பாக அமைந்து வந்தது. இவ்வேளையில் தற்போது இந்த ஆண்டு நடைபெற்று வந்த 2025 ஐபிஎல் தொடரையும் வென்று தனது 18 ஆண்டுகால வேதனையை தீர்த்துள்ளார்.

- Advertisement -

கடந்து 2008-ஆம் ஆண்டு முதல் ஆர்சிபி அணிக்காக விளையாடி வரும் அவர் இதுவரை கோப்பையை முடியாமல் தவித்து வந்த வேளையில் இந்த ஆண்டு ஆர்.சி.பி அணி வெற்றி பெற்றதன் மூலம் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை முத்தமிட்டுள்ளார். தனது கரியரில் மிகப்பெரிய கோப்பையாக பார்த்த அந்த ஐபிஎல் கோப்பையை வென்று தற்போது மிகுந்த உற்சாகத்தில் விராட் கோலி உள்ளார்.

இந்நிலையில் நேற்று ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்று முடிந்த பின்னர் ஓய்வறையில் விராட் கோலி ஆர்.சி.பி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதாருக்கு என்ன பரிசு கொடுத்தார்? என்பது குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் முன்னாள் ஆர்.சி.பி அணியின் வீரரான ஏபிடி வில்லியர்ஸ் இதனை வீடியோவாகவும் படம் எடுத்துள்ளார்.

- Advertisement -

இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற பின்னர் ஓய்வறைக்கு சென்ற விராட் கோலி அங்கிருந்த கேப்டன் ரஜத் பட்டிதாரை பார்த்து “மாற்று வீரராக அணிக்குள் வந்து இன்று ஐபிஎல் கேப்டனாக மாறியுள்ளாய்” என்று அவரை செல்லமாக கேலி செய்துவிட்டு தன்னுடைய “பேவரைட் பேட்” ஒன்றை அவரது கிட் பேக்கிலிருந்து எடுத்து ரஜத் பட்டிதாரை நோக்கி தூக்கி எறிந்தார். அதனை பிடித்த ரஜத் பட்டிதார் விராட் கோலி கொடுத்த அந்த விலை மதிப்பில்லா பரிசை பெற்றுக் கொண்டு அந்த பேட்டை முத்தமிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க : ரஜத் பட்டிதாரின் இந்த குணம் தான் ஐ.பி.எல் கோப்பையை வெல்ல காரணம் – சுனில் கவாஸ்கர் புகழாரம்

விராட் கோலி பொதுவாகவே தனக்கு பிடித்த வீரர்களுக்கு இதுபோன்று ஒரு நினைவு பரிசை வழங்குவது வழக்கம். அந்த வகையில் முதல் கோப்பையை பெற்றுத் தந்த ரஜத் பட்டிதாருக்கு அவருக்கு மிகவும் பிடித்த பேட் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisement