நாக் அவுட்டுக்கு முன்னாடி வீக்னெஸை சரி பண்ணிட்டாரு.. அவர நிறுத்துவது கஷ்டம்.. கைஃப் பாராட்டு

Mohammed Kaif 2
Advertisement

ஐசிசி உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 5ஆம் தேதி மும்பையில் நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. அதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய லிக் சுற்றில் 9 போட்டிகளிலும் 9 வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளதால் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் காணப்படுகிறது.

மேலும் தற்போதைய அணியில் விராட் கோலி முதல் ஷமி வரை அனைத்து வீரர்களுமே நல்ல ஃபார்மில் மிகச்சிறப்பாக விளையாடி வருவதால் 2011 போல முறை கோப்பையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தற்போதைய அணியில் பேட்டிங் வரிசையில் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டுமே இத்தொடரின் துவக்கத்தில் தடுமாற்றமாக செயல்பட்டது ரசிகர்களுக்கு கவலையாக இருந்தது.

- Advertisement -

கைப் பாராட்டு:
அதாவது அறிமுகமானது முதலே ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்ளும் அவர் உயரமான வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் ஷார்ட் பிட்ச் பவுன்சர் பந்துகளில் ஃபுல் ஷாட் அடிக்க முயற்சித்து அவுட்டாவதை வழக்கமாக வைத்திருந்தார். அதனால் ஸ்ரேயாஸ் ஐயர் என்றாலே பவுன்சர் பந்துகளில் தடுமாறுவார் என்பதை அனைவரும் அறிந்த நிலையில் இந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அதே டெக்னிக்கை பயன்படுத்தி அவரை அவுட்டாக்கின.

அதனால் அணியிலிருந்து நீக்குமாறு விமர்சனங்கள் எழுந்த போதிலும் அதற்கெல்லாம் அசராமல் பயிற்சிகளை எடுத்த அவர் தென்னாபிரிக்கா மற்றும் நெதர்லாந்துக்கு எதிரான போட்டிகளில் 81, 128* ரன்கள் அடித்து அசத்தினார். இந்நிலையில் செமி ஃபைனலுக்கு முன்பாக ஸ்ரேயாஸ் ஐயர் தம்முடைய பலவீனத்தை சரி செய்துள்ளதால் நாக் அவுட் சுற்றில் சிறப்பாக செயல்படுவார் என்று முகமது கைஃப் பாராட்டுடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஸ்ரேயாஸ் தற்போது பவுன்சர் பந்துகளுக்கு எதிராக சிக்குவதில்லை. அவர் தன்னுடைய பேட்டிங்கில் நிறைய மாற்றங்களை செய்துள்ளார். அதனால் ஃபுல் சாட்டை அவர் தற்போது சிறப்பாக அடிக்கிறார். அதன் காரணமாக பவுலர்களுக்கு பிட்ச் செய்து பந்து வீசுவதை தவிர்த்து வேறு வழியில்லை. ஏனெனில் அவர் ஃபுல் ஷாட் அடித்தால் நீங்கள் எங்கே பந்து வீசுவீர்கள்”

இதையும் படிங்க: நாக் அவுட்டுக்கு முன்னாடி வீக்னெஸை சரி பண்ணிட்டாரு.. அவர நிறுத்துவது கஷ்டம்.. கைஃப் பாராட்டு

“ஒருவேளை நீங்கள் பிட்ச் அப் செய்தால் அவர் மிட் ஆன் திசையில் அடிப்பார். எனவே தற்போது ஸ்ரேயாஸ் பேட்டிங்கில் நாம் முழுமையான ஆட்டத்தை பார்க்கிறோம். குறிப்பாக 4வது இடத்தில் இந்த உலகக்கோப்பையில் பெரிய ஃபார்மில் இல்லையென்றாலும் அவர் சதமடித்துள்ளது தன்னம்பிக்கையை கொடுக்கும். மும்பையில் நடைபெறும் நியூஸிலாந்துக்கு எதிரான செமி ஃபைனலில் அவர் இதே ஃபார்மில் இருப்பது நமக்கு தேவையாகும்” என்று கூறினார்.

Advertisement