பெருசா மாத்தல.. மற்ற இந்திய கேப்டன்களுக்கும் ரோஹித்துக்கும் உள்ள வித்யாசம் அது தான்.. கம்பீர் கருத்து

Gautam Gambhir
Advertisement

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தமக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பில் இந்திய அணியை மிகச் சிறப்பாக வழி நடத்தி வருகிறார். குறிப்பாக 5 ஐபிஎல் கோப்பைகளை வென்று அனுபவத்தை கொண்டுள்ள அவர் விராட் கோலிக்கு பின் கேப்டனாக பொறுப்பேற்று 2022 ஆசிய மற்றும் டி20 உலகக் கோப்பையை தொடர்ந்து 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் தோல்வியை சந்தித்தார்.

அதனால் விமர்சனங்களுக்குள்ளான அவர் அதற்காக அசராமல் இத்தொடரில் சொந்த மண்ணில் அனைத்து வீரர்களையும் சிறப்பாக வழி நடத்தி லீக் சுற்றில் களமிறங்கிய 9 போட்டிகளிலும் இந்தியாவுக்கு 9 வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். குறிப்பாக 2003இல் கங்குலி தலைமையில் அதிகபட்சமாக 8 தொடர் வெற்றிகளை மட்டுமே பெற்ற இந்தியா தற்போது உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக ரோஹித் தலைமையில் 9 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

கம்பீர் பாராட்டு:
மேலும் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி அடித்து நொறுக்கும் அவர் 500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து ஆரம்பத்திலேயே நல்ல துவக்கத்தை கொடுத்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். இந்நிலையில் 2019 உலகக் கோப்பைக்கும் தற்போதைய இந்திய அணியிலும் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை என்று கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அணியில் இருக்கும் அனைத்து வீரர்களுக்கும் நிலையான வாய்ப்புகளை கொடுத்து அவர்களின் இடம் பாதுகாப்பாக இருப்பதாக உணர வைப்பதே ரோஹித் சர்மாவுக்கு மற்ற இந்திய கேப்டன்களுக்கும் இருக்கும் வித்தியாசம் என்று கம்பீர் பாராட்டியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “2019க்கும் 2023க்கும் பெரிய மாற்றங்கள் இல்லை”

- Advertisement -

“2019 அணியில் நிறைய மாற்றங்கள் நடந்ததை ஒப்பிடும் போது தற்போது சிறிய அளவிலான மாற்றங்கள் மட்டுமே நடந்துள்ளது. ஒரு நல்ல கேப்டன் வீரர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பார். அது உடைமாற்றம் அறையை பாதுகாப்பாக வைக்கும். ரோகித் தமக்கு மட்டுமல்லாமல் மற்ற 14 வீரர்களும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்கிறார். அதனால் தான் அவர் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார். சர்வதேச அளவிலும் அதிக விகிதத்தில் வெற்றிகளை பெற்று வருகிறார்”

இதையும் படிங்க: மேக்ஸ்வெல் இன்னிங்ஸ் ஆல் டைம் பெஸ்ட்ன்னு சொல்ல முடியாது.. அந்த 2 இந்தியர்களும் அசத்திருக்காங்க.. கங்குலி கருத்து

“அதே போல நீங்கள் புள்ளி விவரங்கள் மற்றும் கோப்பைகள் அடிப்படையில் பார்த்தாலும் அவர் அனைத்து கட்டங்களையும் பூர்த்தி செய்துள்ளார். அதை விட உடைமாற்றும் அறையை அவர் பாதுகாப்பாக வைத்திருப்பது முக்கியமாகும். மேலும் போட்டியின் முடிவில் அவர் அணி வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கொடுப்போம் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் சொல்கிறார். அது தான் ஒரு தலைவராக ரோகித் சர்மா மற்றும் இந்திய அணியை வழி நடத்திய முந்தைய கேப்டன்களுக்கு இடையே உள்ள வித்தியாசமாக இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement