ஆஸி அணிக்கெதிரான இன்றைய 5 ஆவது போட்டியில் கேப்டன் மாற்றம் நடைபெற வாய்ப்பு – காரணம் இதோ

SKY
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியானது இன்று டிசம்பர் 3-ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. ஏற்கனவே இந்த தொடரின் முதல் நான்கு ஆட்டங்கள் நடைபெற்று முடிந்த வேளையில் இந்திய அணி மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்டது.

இதன் காரணமாக இன்றைய ஐந்தாவது போட்டியில் அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்த தொடரில் இடம் பெற்று இதுவரை விளையாடாமல் பென்ஞ்ச்சில் அமர்ந்திருந்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷிவம் துபே ஆகியோருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

அதோடு இன்றைய போட்டியில் கேப்டன் சூரியகுமார் யாதவ்க்கு ஓய்வு வழங்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்சி செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது

ஏனெனில் உலகக் கோப்பை போட்டிகளில் இருந்தே தொடர்ச்சியாக விளையாடிய வரும் சூரியகுமார் யாதவ் அடுத்ததாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்திலும் டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு இன்றைய போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டு ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்சி செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

அதோடு ரிங்கு சிங்குக்கு ஓய்வு வழங்கப்பட்டு அவரது இடத்தில் ஷிவம் துபேவும், அக்சர் படேலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவரிடத்தில் வாஷிங்டன் சுந்தரும் விளையாடுவார்கள் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : வேற என்ன தாங்க பண்ணமுடியும்.. ரஹானே மற்றும் புஜாரா வெளியேற்றம் குறித்து பேசிய – சவுரவ் கங்குலி

அதோடு கடந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயரின் வருகை காரணமாக தனது இடத்தை இழந்த திலக் வர்மா மீண்டும் இன்றைய கடைசி போட்டியில் விளையாட வாய்ப்புள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement