வேற என்ன தாங்க பண்ணமுடியும்.. ரஹானே மற்றும் புஜாரா வெளியேற்றம் குறித்து பேசிய – சவுரவ் கங்குலி

Ganguly
- Advertisement -

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சொந்த மண்ணில் தற்போது நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இந்திய அணியானது அடுத்ததாக தென் ஆப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற உள்ள மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிசிசிஐ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் மூன்று வகையான கிரிக்கெட்க்கும் தனித்தனியே கேப்டன்கள் நியமிக்கப்பட்டு தனித்தனியே அணிகளும் அறிவிக்கப்பட்டன. இந்த தொடருக்கான இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓய்வினை கேட்டுக்கொண்டதன் காரணமாக அவர்கள் இருவருக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அதன் காரணமாக இந்த தொடரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று இந்த தென்னாப்பிரிக்க தொடருக்கான டெஸ்ட் அணியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் விளையாடுகின்றனர்.

ஆனால் இந்திய அணியின் அனுபவ வீரர்களான புஜாரா மற்றும் ரகானே ஆகியோருக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்படாதது அனைவரது மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் முக்கிய வீரர்களாக இருந்த அவர்கள் இருவரையும் இந்திய அணி நிர்வாகம் கழற்றிவிட்டது அனைவரையும் கவலையடைய வைத்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இப்படி புஜரா மற்றும் ரஹானே ஆகியோர் வெளியேற்றப்பட்டது குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி கூறுகையில் : முதலில் நான் ரகானே மற்றும் புஜாரா ஆகியோர் இந்திய அணிக்காக வழங்கிய பங்களிப்பிற்கு பாராட்டினையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இதே போன்ற வெளியேற்றம் அனைவருக்கும் நடக்கும் ஒரு விடயம் தான்.

இதையும் படிங்க : இந்திய ஏ அணியில் கூடவா அவருக்கு சேன்ஸ் தரமாட்டீங்க? ஆதங்கத்தை வெளிப்படுத்திய – இர்பான் பதான்

ஏனெனில் புதிய திறமைகளை கண்டறிந்து விளையாட வைக்க வேண்டும். அந்த வகையில் தான் இவர்கள் இருவரது வெளியேற்றமும் நடந்திருக்கிறது. இந்தியாவில் மகத்தான திறமைகள் நிறைய இருக்கின்றன. தற்போது இவர்கள் இருவரும் வெளியேற்றப்படுவது தான் ஒரே வழி. ஏனெனில் அப்பொழுதுதான் புது முகங்களை கண்டறிய முடியும். அதேபோன்று தேர்வுக்குழுவும் தற்போது புதிய முகங்களை கண்டறிய தான் விரும்புகிறார்கள் என கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement