இந்திய ஏ அணியில் கூடவா அவருக்கு சேன்ஸ் தரமாட்டீங்க? ஆதங்கத்தை வெளிப்படுத்திய – இர்பான் பதான்

Irfan-Pathan
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவடைந்த வேளையில் ஐந்தாவது போட்டியானது இன்று டிசம்பர் 3-ஆம் தேதி பெங்களூரு நகரில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு அடுத்ததாக இந்திய அணியானது தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற உள்ள மூன்று வகையான கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்று விளையாட இருக்கிறது.

அந்த வகையில் தென்னாப்பிரிக்க நாட்டிற்கு செல்லும் இந்திய அணி அங்கு நடைபெறவுள்ள மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டி20 போட்டிகள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேளையில் சில வீரர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்படாதது அனைவரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்ப்படுத்தி உள்ளது.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக் இந்த தென்னாப்பிரிக்க தொடருக்கான அணியில் தேர்வு செய்யப்படாததோடு சேர்த்து இந்திய ஏ அணியிலும் அவர் இடம்பெறாதது வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக முன்னாள் வீரரான இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பகிர்ந்துள்ள கருத்தில் : உம்ரான் மாலிக் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வரை இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடி வந்தார். ஆனால் தற்போது அவருக்கு இந்தியை ஏ அணியில் கூட வாய்ப்பு கிடைக்காததில் மிகவும் வருத்தமாக இருக்கிறது.

- Advertisement -

நிச்சயம் அவர் இந்திய ஏ அணியில் இடம்பெற்றிருக்க வேண்டிய வீரர் என்றும் எதிர்காலத்தில் அவர் சிறப்பான வேகப்பந்து வீச்சாளராக வலம் வருவார் என்றும் இர்ஃபான் தான் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி அதிவேக பந்துவீச்சினை வெளிப்படுத்திய உம்ரான் மாலிக் தனது அற்புதமான செயல்பாட்டின் காரணமாக இந்திய அணிக்காக அறிமுகமாகி 10 ஒருநாள் போட்டிகளிலும் 8 டி20 போட்டியிலும் விளையாடியுள்ளார்.

இதையும் படிங்க : ரிங்கு சிங் வெறும் டி20 பிளேயர் இல்ல.. அதுலயும் சாதிக்க முடியும்ன்னு காமிச்சுருக்காரு.. நெஹ்ரா பாராட்டு

இந்தியாவின் அதிவேக பந்துவீச்சாளர் என்கிற பெயரை எடுத்தும் அவரை தற்போது இந்திய அணி ஒதுக்கி வருவது அனைவரது மத்தியிலும் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. இந்திய அணிக்காக உம்ரான் மாலிக் நிச்சயம் மீண்டும் விளையாட வேண்டும் என்று ரசிகர்களும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement