10 நாளில் 2 ஃபைனல்களில் தோல்வி.. கைநழுவிய 2வது கோப்பை.. ஸ்ரேயாஸ் இயரை துரத்தும் சோகம்

Shreyas iyer mumbai 2
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது. அதனால் 17 வருடங்களாக சந்தித்த தொடர் தோல்விகளை உடைத்த பெங்களூரு அணி மற்றும் விராட் கோலி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்தனர். மறுபுறம் பஞ்சாப் கிங்ஸ் 18வது வருடமாக நெஞ்சம் உடையும் தோல்வியை சந்தித்து முதல் கோப்பையை கோட்டை விட்டது.

குறிப்பாக 26.75 கோடிக்கு வாங்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் 600+ ரன்களை குவித்து மிகச்சிறப்பாக கேப்டன்ஷிப் செய்து 14 வருடங்கள் கழித்து பஞ்சாப்பை ஃபைனல் அழைத்துச் சென்றார். ஆனால் இறுதிப் போட்டியில் வெறும் ஒரு சிக்சர் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி தோற்றது. அதனால் பஞ்சாப் அணிக்காக முதல் கோப்பையை வெல்லும் வாய்ப்பை அவர் போராடி நழுவ விட்டது பல ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது.

- Advertisement -

மீண்டும் தோல்வி:

இந்நிலையில் மும்பையில் உள்ளூர் டி20 தொடர் நடைபெற்றது. அந்தத் தொடரில் சோபோ மும்பை பால்கான்ஸ் என்ற அணியை சிறப்பாக வழி நடத்திய ஸ்ரேயாஸ் ஐயர் ஃபைனலுக்கு அழைத்துச் சென்றார். அந்த நிலையில் ஜூன் 12ஆம் தேதி நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் மும்பை சௌத் சென்ட்ரல் அணியை பால்கான்ஸ் அணி எதிர்கொண்டது.

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற சௌத் சென்ட்ரல் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய பால்கான்ஸ் அணி 20 ஓவரில் 157/4 ரன்களை மட்டுமே எடுத்தது. ரகுவன்சி 7, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 16 என முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். அதிகபட்சமாக மயூரேஸ் 50* (32), ஹர்ஸ் அகவ் 45* (28) ரன்கள் எடுத்தார்கள்.

- Advertisement -

நழுவிய 2வது கோப்பை:

அடுத்து விளையாடிய சவுத் சென்ட்ரல் அணி போராடி 19.2 ஓவரில் 158/5 ரன்கள் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ராஜேஷ் சுதர் 53, அவைஸ் கான் 38 ரன்கள் எடுத்தார்கள். அதனால் சித்தார்த் லெட் தலைமையிலான மும்பை சவுத் சென்ட்ரல் அணி கோப்பையை ரோஹித் சர்மா கைகளால் வாங்கி சாதனை படைத்தது.

இதையும் படிங்க: 35 பந்தில் 100 அடிச்சு என்ன யூஸ்.. அந்த 5 நாள் தாக்கு பிடிக்க முடியுமா? சூர்யவன்சிக்கு யோக்ராஜ் சவால்

மறுபுறம் ஸ்ரேயாஸ் தலைமையிலான பால்கான்ஸ் அணி போராடி தோல்வியை சந்தித்தது. ஜூன் 2ஆம் தேதி ஐபிஎல் 2025 ஃபைனலில் தோல்வியை சந்தித்த அவர் ஜூன் 12ஆம் தேதி இத்தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளார். அந்த வகையில் 10 நாட்களுக்குள் ஸ்ரேயாஸ் ஐயர் 2 டி20 தொடர்களின் ஃபைனல் வரை சென்று 2 கோப்பைகளை நழுவ விட்டு சோகத்தை சந்தித்துள்ளார்.

Advertisement