விராட், ரோஹித் மாதிரி சோசியல் மீடியா ஃபேன்ஸ் இல்லாததால் யாரும் அவரை பாராட்டுவதில்லை.. கம்பீர் ஆதங்கம்

- Advertisement -

இறுதிக்கட்டத்தை தொட்டுள்ள ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 19ஆம் தேதி நடைபெற உள்ள மாபெரும் ஃபைனலில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமாக திகழும் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து 2003 தோல்விக்கு பதிலடி கொடுத்து 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை முத்தமிடும் முனைப்புடன் இந்தியா களமிறங்க உள்ளது.

அப்போட்டியில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் பேட்டிங் துறையில் மிகச் சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு நிகராக இந்த உலகக் கோப்பையில் ஸ்ரேயாஸ் ஐயர் மிகச் சிறப்பாக விளையாடுவதால் கேம் சேஞ்சராக இருப்பார் என்று கௌதம் கம்பீர் சமீபத்தில் பாராட்டியிருந்தார்.

- Advertisement -

கம்பீர் ஆதங்கம்:
ஏனெனில் இதுவரை 2 சதங்கள் மற்றும் 400க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்துள்ள அவர் உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு தொடரில் 400 ரன்கள் மற்றும் 2 சதங்கள் அடித்த முதல் இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்ற யுவராஜ் சிங் போன்றவர்கள் படைக்காத சாதனைகளை படைத்தார். குறிப்பாக காயத்தால் விளையாடுவாரா என்று சந்தேகிக்கப்பட்ட அவர் இத்தொடரில் இங்கிலாந்து, நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளில் ஷார்ட் பிட்ச் பந்துகளில் அவுட்டானதால் நீக்கப்பட வேண்டும் என்று விமர்சனங்கள் எழுந்தன.

ஆனாலும் மனம் தளராமல் பயிற்சிகளை எடுத்த அவர் நியூசிலாந்துக்கு எதிராக செமி ஃபைனலில் 67 பந்துகளில் சதமடித்து 105 ரன்கள் விளாசி உலகக்கோப்பை நாக் அவுட் போட்டியில் அதிவேகமாக சதமடித்த வீரர் என்ற ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் சாதனையை உடைத்து புதிய உலக சாதனை படைத்தார். இந்நிலையில் ரோகித் சர்மா, விராட் கோலி போல் சமூக வலைதளங்களில் நிறைய ரசிகர்கள் இல்லாத காரணத்தால் ஸ்ரேயாஸ் ஐயர் அதிகம் கொண்டாடப்படுவதில்லை என்று கௌதம் கம்பீர் ஆதங்கத்துடன் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “நேரலையில் நான் சொன்னதை மீண்டும் சொல்கிறேன். ஸ்ரேயாஸ் ஐயர் தான் நியூசிலாந்துக்கு எதிராக கேம் சேஞ்சராக இருந்தார். இருப்பினும் சமூக வலைதளங்களில் நிறைய ஃபாலோயர்கள் இல்லாததால் அவருக்கு பாராட்டுக்கள் கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன்”

இதையும் படிங்க: ப்ளீஸ் எங்களுக்காக இதை பண்ணுங்க.. உ.கோ இறுதிப்போட்டிக்கு முன்னர் தல தோனிக்கு ரசிகர்கள் – வைத்துள்ள கோரிக்கை

“இத்தனைக்கும் அவர் முதல் உலகக்கோப்பையில் விளையாடுகிறார். ரோஹித் மற்றும் விராட் ஆகியோர் இதற்கு முன் உலகக் கோப்பையில் விளையாடிய பெரிய அனுபவத்தை கொண்டுள்ளனர். இருப்பினும் அவர்களுக்கு நிகராக ஸ்ரேயாஸ் பாராட்டுகளை பெறாதது துரதிஷ்டவசமாகும். என்னைப் பொறுத்த வரை அவர் இந்த தொடரில் நம்ப முடியாத பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். அவரால் தான் நியூசிலாந்துக்கு எதிராக நாம் 350க்கு பதிலாக 390 ரன்கள் குவித்தோம். ஒருவேளை இந்தியா அப்போட்டியில் 350 ரன்களை மட்டும் இலக்காக நிர்ணயித்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை நினைத்து பாருங்கள்” என்று கூறினார்.

Advertisement